ரபிஸி: இசி தலைவர்கள் கேள்விகளைத் தவிர்க்க சவால் விடுகிறார்கள்

1 ecதேர்தல் ஆணைய (இசி) உயர் தலைவர்கள் இருவரும்  பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை பற்றிய கேள்விகளைத் தவிர்ப்பதற்காக சவால் விடுத்து கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என பிகேஆர் எம்பி ரபிஸி ரம்லி கூறுகிறார்.

அவ்விருவரும்  கேள்விகளுக்குப்  பதிலளிப்பதைத் தவிர்ப்பது,  “அவர்கள் எதையோ மூடி மறைக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது”, என்றாரவர்.

இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப்பும் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமாரும் (இடம்)  தங்களுக்கும் அழியா மை விநியோகிப்பாளருக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று நாடாளுமன்றத்தில் கூறியதை  ரபிஸி “ஆண்மகனாக இருந்தால்” வெளியில் வந்து சொல்லட்டும் என்று சவால் விடுத்திருப்பது குறித்து ரபிஸி கருத்துரைத்தார்.