எஸ்ஐஎஸ்- க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என ஜாவி எச்சரிக்கை

1-jawiமுஸ்லிம் பெண்கள் அழகிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்குத் தடை விதிக்கும் பாட்வா குறித்து “கேள்வி எழுப்பியதற்காக”ஒரு என்ஜிஓ-வான இஸ்லாத்தில் சகோதரிகள் (எஸ்ஐஎஸ்) அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய துறை (ஜாவி) எச்சரித்துள்ளது.

அவர்கள், ஷியாரியா சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரிம 3,000 வரை அபராதம் அல்லது ஈராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று ஜாவி இயக்குனர் ச்சே மாட் ச்சே அலி கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.