ஜப்பானிய நிறுவனம் என்எப்சி-யின் 250 மில்லியன் கடனை ஏற்கிறது

NFCஎன்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் முழுப் பங்குகளையும்  அது சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் கொள்முதல் செய்வதற்கு Kirimitonas Agro  Sdn Bhd என்ற ஜப்பானிய நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

அதனால் மலேசிய அரசாங்கத்திடம் என்எப்சி பெற்றுள்ள 250 மில்லியன் ரிங்கிட்  கடனையும் அதன் எல்லாச் சொத்துக்களையும் ஜப்பானிய நிறுவனம் ஏற்றுக்  கொள்ளும்.

அதற்கான விற்பனை கொள்முதல் ஒப்பந்தத்தில் இரு தரப்புக்களும் பிப்ரவரி 21ம்  தேதி கையெழுத்திட்டதாக என்எப்சி தலைவர் முகமட் சாலே இன்று  கோலாலம்பூரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அந்த விஷயம் மீது அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விடுத்த  அறிக்கைகளுக்கு அவர் விளக்கமளித்தார்.

“அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா  என்பது என்எப்சி-க்குத் தெரியாது என்றும் கொள்முதல் செய்த நிறுவனம் ஏதும்  எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் அவர்  சொன்னார்.