13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் பயன்படுத்தப்பட்ட ஆழமான தீவிரமான இன வியூகத்தின் மூலம் பிஎன் மலேசியாவை நீண்ட காலத்திற்கு ஆட்சி புரிய முடியும்.
அது 2008 தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மலேசியா ஜனநாயகத்திலிருந்து விலகிச் செல்வதை அது குறிக்கிறது என்றும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் அண்மைய தேர்தல்கள் பற்றிய தங்கள் ஆய்வுகளில் அவ்வாறு
தெரிவித்துள்ளனர்.
“மலாய்க்காரர்கள் மருட்டப்பட்டுள்ளனர் என்ற உணர்வை அம்னோ அவர்களிடையே ஏற்படுத்தும் போது அது பயனடைகிறது,” என ஹாங்காங் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த அமெரிக்க அரசியல் ஆய்வாளரான வில்லியம் கேஸ் கூறினார்.
மலேசிய சமூகம் மென்மேலும் வேறுபட்டு வருகின்றது. பல வகைப்பட்டதாகவும் மாறி வருகின்றது. ஆனால் இன வம்சாவளியே இன்னும் மேலோங்கி நிற்கிறது. மகுடம் சரிகிறது. ஆனால் இன்னும் விழவில்லை.”
13வது பொதுத் தேர்தல் ஜனநாயகத்திற்குத் தோல்வி என வருணித்த அந்தக் கல்வியாளர்கள் எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் சரியாகத் தான் செய்தன என்று குறிப்பிட்டனர். மலேசியாவில் இன அடிப்படையில் வாக்களிக்கும் போக்கை எதிர்வரும் தேர்தல் தொகுதி மறு நிர்ணய நடவடிக்கை மாற்றினால் தவிர பிஎன் -னை எதிர்க்கட்சிகளினால் வீழ்த்தவே முடியாது என அவர்கள் கருதுகின்றனர்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மலேசிய அரசியலைக் கண்காணித்து வரும் கேஸ், உட்பட 12 கல்வியாளர்கள் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஜனநாயகம் மீதான ஒரு நாள் ஆய்வரங்கில் 13வது பொதுத் தேர்தல் பற்றிய தங்கள் எண்ணங்களை இன்று வெளியிட்டனர்.
மலேசியாவில் தற்பொழுது இன வெறி எல்லா இனத்திடமும் அதிகமாக இருக்கிறது.