TPPA என்ற பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தம் மீதான 18வது சுற்றுப் பேச்சுக்கள் கோத்தா கினாபாலுவில் நேற்று நிறைவடைந்தன.
அந்தப் பேச்சுக்களில் மருந்துகள் சம்பந்தப்பட்ட அறிவாற்றல் சொத்துக்கள் பற்றி எந்த இணக்கமும் ஏற்படவில்லை.
பேச்சுக்கள் இன்னும் தொடரும் என அனைத்துலக வாணிக தொழிலியல்
அமைச்சைச் சார்ந்த ஜே ஜெயஸ்ரீ கூறினார்.
அவர் அந்தப் பேச்சுக்களில் மலேசியாவின் தலைமைப் பேராளரும் ஆவார்.
“பேச்சுக்களின் போது சமர்பிக்கப்பட்ட யோசனை குறித்து எங்களுக்கு சில கவலைகள் உள்ளன. மலேசியாவின் கவலையைப் போக்குவதும் சம நிலையைக் காண்பதும் எங்கள் நிலையாகும்,” என்றார் அவர்.
கோத்தா கினாபாலுவில் பேச்சுக்கள் நிறைவடைந்த பின்னர் நேற்று நிருபர்களிடம் பேசிய ஜெயஸ்ரீ விவாதங்கள் ‘ரகசியமானவை’ என்பதால் மேல் விவரங்களைத் தர மறுத்து விட்டார்.