டிஏபி: சிலாங்கூர் போலீஸ் தலைவர் பற்றி பொய் சொன்னதற்காக உத்துசான் மீது நடவடிக்கை எடுங்கள்

thaiveeganஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியில் குளியலறை தற்காலிக கேண்டீனாக  பயன்படுத்தப்பட்டதைக் காட்டும் படங்களை பரப்புகின்றவர்கள் மீது தேச  நிந்தனைச் சட்டத்தைப் போலீசார் பயன்படுத்துவர் என செய்தி வெளியிட்டதற்காக  அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா மீது நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக்  கொண்டுள்ளார்.

“அத்தகைய பொய்யான செய்தியை வெளியிட்டதற்காக 1984ம் ஆண்டுக்கான  அச்சுக் கூட வெளியீட்டுச் சட்டம் அல்லது 1998ம் ஆண்டு பல்லூடக, தொடர்புச்  சட்டம் ஆகியவற்றின் கீழ் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என லிம்  இன்று ஒர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

“அத்தகைய படங்கள் இனப்பூசலைத் தூண்டி விடக் கூடும் என்பதால் தேச  நிந்தனைச் சட்டத்தின் கீழ் அந்தப் படங்களை பரப்புகின்றவர்கள்
விசாரிக்கப்படலாம் என இடைக்கால சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் ஏ  தெய்வீகன் சொன்னதாக உத்துசான் மலேசியாவின் இணையப் பதிப்பு நேற்று  செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் இன்று தேசநிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்துவது சம்பந்தமாக தாம் எதனையும்  சொல்லவில்லை என்று தெய்வீகன் சொன்னதாக சின் சியூ நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.