எம் இந்திரா காந்தியின் குழந்தைகள் மதம் மாற்றம் செய்யப்பட்டது அரசமைப்புக்கு முரணானது என நேற்று வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்ய வேண்டாம் என அவருடைய வழக்குரைஞரான எம் குலசேகரன் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவரை வலியுறுத்தியுள்ளார்.
தாய்க்கும் அவரது மூன்று பிள்ளைகளுக்கும் நியாயம் கிடைக்க முறையீடு செய்யக் கூடாது என ஈப்போ பாராட் எம்பி-யுமான அவர் சொன்னார்.
இந்திரா காந்தி தமது துயரம் குறித்து கூட்டரசு நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக கேள்விகளை எழுப்ப முயன்ற போது ஏஜி அலுவலகப் பேராளர்கள், அந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறி அதற்கு ஆட்சேபம் தெரிவித்ததாக குலசேகரன் சொன்னார்.
“இப்போது ஈப்போ உயர் நீதிமன்றம் ஒரு முடிவு செய்துள்ளது. நியாயத்தின் அடிப்படையில் ஏஜி அந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யக் கூடாது. இந்திரா காந்தி நீண்ட காலம் துயரத்தை அனுபவித்து விட்டார்,” என மலேசியாகினி தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்தார்.
இப்போது இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் தீர்க்கப் பட்டு விட்டதால் இனி ஏஜி அலுவலகம் தனது வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும். தேவையற்ற பிரச்சனைகளைக் கிளறி மீண்டும் அந்தக் குடும்பத்திற்குத் துன்பத்தைக் கொடுக்க வேண்டாம். இதுவே நமது வேண்டுகோள். சட்டம் மதிக்கப் பட வேண்டும்.
நல்ல கருத்து , நன்றி .
குலசேகரன் கூறுவது உண்மை .அரசாங்கம் வெற்றி பெறுவது முக்கியம் இல்லை.அந்த தாயும் பிள்ளைகளும் நிம்மதியான வாழ்க்கையை தொடர வேண்டும் .மதம் மாறுவது என்பது அந்த பிள்ளைகள் பெரயவர்கள் ஆனதும் சிந்தித்து சுயமாக எடுக்க வேண்டிய முடிவுகள்