ஸ்ரீ பிரிஸ்டினா தலைமையாசிரியருக்கு ஆதரவாக முகநூல் பக்கம் திறக்கப்பட்டுள்ளது

Prisitinaஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் முகமட் நாசிர் முகமட்  நோருக்கு ஆதரவாக முகநூல் நேயர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் எழுதியுள்ள இணையப் பயனாளிகள் அவரது நடவடிக்கையை
ஆதரித்ததுடன் ‘எதிர்மறையான’ தோற்றத்தைத் தருவதற்காக அந்த விவகாரத்தை ‘திசை திருப்பி’ விட்டவர்களையும் சாடியுள்ளனர்.prisina1

முகமட் நாசிர் குளியலறையை தற்காலிக கேண்டீனாக மாற்றிய முடிவுக்காக குறை கூறப்பட்டுள்ளார்.

நேற்று ஏற்படுத்தப்பட்ட அந்த முகநூல் பக்கத்திற்கு இது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘விருப்பங்களை ( likes ) பெற்றுள்ளது. அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகின்றது.

இணையப் பயனாளிகள் முகமட் நாசிரின் நடவடிக்கைகளை ஆதரித்ததுடன் அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சென்று அங்கு நிலைமை வேறு விதமாக இருப்பதைக் கண்டறிந்ததாக சொல்லும் வலைப்பதிவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அதிகாரிகளும் போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்துக் குளியலறை படங்களை சமூக ஊடகங்களில் முதலில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படும் தனிநபரை ‘கைது’ செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

மாணவர்களில் ஒருவருடையான தாயாரான குணேஸ்வரி கெல்லி அந்தப் படங்களை முதலில் முகநூலில் சேர்த்தார்.