இனங்களுக்கிடையிலானப் பிரச்னைகளைச் சரிகட்டுவதற்கென்று தயாரிக்கப்பட்ட சாசனத்தில் கையெழுத்திட்ட சில நிமிடங்களுக்குள் அதில் கையெழுத்திட்ட பெர்காசா மற்றும் இந்திய அரசு சார்பற்ற அமைப்பு பேரின்பம் ஆகிய இருதரப்பினர்களுக்கிடையில் தகராறு மூண்டது.
இச்சாசனம் கையெழுத்திடப்பட்டதை அறிவிப்பதற்காக கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பெர்காசா துணைத் தலைவர் ஜுல்கிப்லி நூர்டின் சுங்கை பூலோ ஸ்ரீ பிரிஸ்தானா பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமட் நாசிர் முகமட் நோர் எடுத்த நடவடிக்களைத் தற்காத்துப் பேசிய போது தகராறு மூண்டது.
இதனால் அதிர்ப்திய்டைந்த பேரின்ப உறுப்பினர்கள் ஜுல்கிப்லியுடன் தகராறில் ஈடுபட்டனர். செய்தியாளர் கூட்டம் முடிவுற்றதும் அவர்கள் ஜுல்கிப்லியை சுற்றிவளைத்துக் கொண்டு விளக்கம் கோரினர்.
ஜுல்கிப்லி அவரது நிலைப்பாடை தற்காத்துக் கொண்டதுடன் அங்கிருந்து வெளியேரினார்.
செய்தியாளர் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற புக்கா புவாசா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி பேரின்பம் தலைவர் யு. தாமோதரனை கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது.
செருப்பால அடிச்ச மாதிரியில்ல?
நம் மதத்தை இழிவாகப் பேசியவனிடம் சமரசம் செய்வது நாய் வாலை நிமிர்த்துவது போலாகும். இவனை போன்றோர் என்றுமே திருந்தமாட்டார்கள்! நம்மிடம் ஒன்று பேசிவிட்டு போனபின் பின்னால் நம்மளையே தூற்றி திரிவார்கள்! இவர்களுக்கு அதிகார பலம் இருப்பதால் நம்மை எந்த காலத்திலும் மதிக்கமாட்டார்கள். வேறு வேலையைப் பார்த்தால் நன்மை என்றே நினைக்கிறன்.
மலேசிய மக்கள் சக்தி கட்சி முன்னால் தேசிய துணைத்தலைவர் மதிப்புமிகு தாமோதரன் பேச வேண்டியதை பேசி தன் நிலைபாட்டை துணிவோடு பேசுபவர். எதற்கும் அஞ்சமாட்டார். ஒரு குறிப்பிட்ட ஜால்ராக்களை பக்கத்தில் வைத்து கட்சியை ஏப்பமிடும் சிலர் அவரின் வளர்ச்சியை சகிக்க முடியாமல் பொறமை பட்டனர்….!
அறம் நின்று கொல்லும்!
இப்ராகிம் அலியை நம்ப வேண்டாம். பட்டது போதமடா சாமீ…!
அவர் ஒரு சந்தர்ப்பவாதி…!
திருந்தாத ஜென்மங்கள் இருந்துதென்ன லாபம் .
தகராற்றில் ஈடுபட்ட பேரின்பம் உறுப்பினர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். வலியோர் சில எளியோர் தமை வதையே புரிகுவதா? உதவாதினி ஒரு தாமதம் உடனே எழு தமிழா..
அவனுங்களோட கூட்டுச் சேர்ந்ததே தவறு! நாய் வாலை நிமிர்த்த முடியுமா? எடுத்ததுமே அவன் புத்தியைக் காட்டிட்டான்! வீராப்பா கிளம்பிட்டு அப்புறம் விருந்து சாப்பிட்டுட்டுத்தானே வந்தீங்க…!! இன்னும் போகப் போகப் பாருங்க நல்லாக் கொடுப்பானுங்க ……… அடி!
யாரிடம் கூட்டு சேர்வது என்று ஒரு விவஸ்தை வேண்டாமா ? குத்துது குடையுதுன்னு சொல்லவேண்டாம் ! நாய் வாலை நிமர்தவேண்டாம் ,நாயோடு சேராமல் இருப்பதே மேல் !
வேண்டுமடா இன்னும் வேண்டுமடா, மானங்கெட்டு இருந்தால் இது தான் கதி. மக்கள் ஒற்றுமையாய் இருக்கிறோம்னு பொய் படம் போடுறான், நாமும் ரோசம் மானம் இல்லாம துணைபோரம், சமுதாயத்தையும் சேர்த்து விற்க பார்க்கராணுங்க, துப்பு கெட்டவர்கள்.
இதுவும் வேண்டுமடா… உனக்கு இன்னமும் வேண்டுமடா… எதையும் நன்றாய் எடைபோடாமல் கொத்தும் பாம்புடன் உறவு கொண்டாயே…!
தேர்தலுக்குமுன் நான் கூறியதை ஞாபகம் உள்ளவர்கள் நினைவுகூறுவார்கள். நம்மவர்களுக்கு ஏன்தான் இந்த அடிமை புத்தியோ – என்றுதான் நம்மவர்கள் எல்லாம் நாம் எல்லாரும் ஓரினம் என்று என்னுகின்றனரோ அன்றுதான் விடிவு. எனக்கும் சொல்லி சொல்லி சீ என்றாகிவிட்டது.முதுகு எலும்பில்லாத நம்மவர்கள் என்றுமே இந்த மடையர்களுக்கு அடிமைதான்.
.
இவ்வருடத்தின் மிகச் சிறந்த நகைச்சுவை. அவர்களின் உரிமையை யாரும் கேள்வி கேட்பதில்லை அது போல நம்முடைய உரிமைகளை கேட்கும்பொழுது வாய் முடி இருப்பாங்களா?
தாமோதரனுக்கு பேரின்பம் பெறுவதில் அலாதியான இன்பம் உண்டு, அதனால் தான் பொதுத் தேர்தலுக்கு முன் ம.இ.காவால், ஐ.பி.எப், பிபிபி, இண்ட்ராப்பால் ஏன் வேத மூர்த்தியால் கூட முடியாது. இது மானங்கெட்ட வேலை என்று ஒதுங்கிக் கொள்ளும் நிலையிலும் பாரிசானுக்காக வக்காளத்து வாங்க பேரின்பம் தாமோதரன் நின்றார். செரண்டாவில் தமிழ்ப் பள்ளி கட்டுமானத்தை ஏமாற்றி வந்த நஜிப் அரசாங்கத்தை எதிர்த்து பெற்றோர்கள் உண்ணாவிரதம் இருந்த போது. உண்ணா விரதத்தை கைவிட வற்புறுத்திய ஒரு மனிதர் இவர். ஒரு அன்பர் எழுதியுள்ளார் தனேந்திரனுக்கு தாமோதரன் வளர்ச்சியில் பொறாமை என்று, ஐயா இந்த சமுதாயத்தின் உரிமையை விற்பதில் இந்த இரண்டு மஞ்ச துணியைப் போட்டுக் கழுத்தை அறுப்பவனுங்களுக்கும் ஏற்பட்டப் போட்டியை வளர்ச்சி என்று சொல்லாதீர்கள். இவர்களில் எவன் சிறந்த எட்டப்பன் என்றால், இந்த இன வெறியர்களுடன் ஒப்பந்தம் செய்ததன் வழி தாமோதரன் எட்டப்பன் கருணாவை மிஞ்சி விட்டார். இவனுங்க அரசாங்க மானியங்களுக்காக நம்ம அப்பாவித் தமிழர்களை பகடைக் காயாய் பயன் படுத்துவதை நினைத்தால், இப்படியும் ஒரு பிறவியா என்று எண்ணத்தேன்றுகிறது!
மானங்கெட்ட மனிதனே .. நம் மதத்தை இளிவாக பேசியவனிடம் போய் சமரசம் பேச முடியுமா?..எத்தனை தடவை பட்டாலும் புரியாது உங்களுக்கு. நீ அவரிடம் சமரசம் பேச வேண்டும் என இந்நாட்டு இந்தியர்கள் அனைவரும் கேட்டோமா ..??? விளம்பரம் தேடுகின்றாயா.. ??? பல இந்தியர்கள் இந்த நாடில் ஏழையாக இருக்கின்றார்கள், அவர்களுக்கு எதுவும் சேவைச் செய்தது அல்ல ஆனால் பெரிய சமுக காப்பாளர் போன்று சமரசம் பேச போகிறாயா..? பேரின்பம் உனக்கு பெருந்துன்பம் கொடுத்துவிட்டது. இனி எல்லா இந்திய மக்களிடமும் நீ நல்ல திட்டு வாங்குவாய்.. !!!
பேரின்பம். செய்தியை கண்ணுற்றதும் எனக்கு பெரிய மன துன்பம்! ஏன் நம்மவர்களின் எண்ணங்கள் இவளவு கேவலமாக செயல் படுகிறது. எதை எதிர்ப்பார்த்து இவர்கள் இன வெறியர் என அறிந்தும் உடன் பாடு ஒப்பந்தம் புரிய சம்மதித்தனர். கண்களிரண்டில் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும், உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது உடன் பிறந்தோரையே கருவறுக்கும். என்ற பாடல் வரிகள் சம்பந்த பட்டவர்களுக்கு புரியாதா? உடனே அவர்கள் உள் மன எண்ணங்களை காட்டி விட்டார்கள். பிள்ளையார் பிடிக்க சென்றீர்கள் அது குரங்காய் அமைந்து விட்டது. அது அவர்கள் தவறல்ல. நம்மவர்களின் மூடத்தனம். இனம்,மதம்,ஆகியவற்றை இழித்துரைத்த வெறியனிடம் நட்பு? எதை எதிர்பார்த்து?