டிஏபி உறுப்பினர்கள் புதிய கட்சி அமைக்க விருப்பம் கொண்டிருப்பதாக சங்கப் பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்) கூறியிருப்பதற்கு ஆதாரம் காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஆர்ஓஎஸ் இயக்குனர் அப்துல் ரஹ்மான் அப்படிச் சொன்னதாக நேற்று ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.
“அது மட்டுமீறிய பேச்சு”, என்று குறிப்பிட்ட டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், புதிய கட்சி அமைப்பது பற்றி டிஏபி தலைவர்கள் எந்த இடத்திலும் விவாதித்தில்லை என்றார்.
“புதிதாக ஒரு பொய்யை” அவிழ்த்து விட்டிருக்கும் ஆர்ஓஎஸ் இயக்குனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி டிஏபி அதன் வழக்குரைஞர்களுடன் ஆலோசித்து வருகிறது என்றாரவர்.
டிஏபி பதிவு ரத்துச் செய்யப்பட்டால், அன்றைய தினமே எல்லா டிஏபி சட்டமன்ற நாடாளுமன்ற உறுபினர்களும் ராஜினாமா செய்ய வேண்டியதுதான்! பிறகு அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாஸ் சின்னத்தில் மீண்டும் போட்டியிட்டு பாரிசான் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்க வேண்டியதுதான் ஒரே வழி.