இனவாத மருத்துவர்கள் எனக் கூறப்படுகின்றவர்களைப் பற்றி விசாரிப்பதாக தாம் வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ வாக்குறுதி அளிக்கவில்லை என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார்.
பினாங்கில் ‘இனவாத மருத்துவர்கள்’ என்னும் கடுமையான குற்றச்சாட்டைத் தாம் விசாரிப்பதாக வாக்குறுதி அளித்ததாகச் சொல்லப்படுவது குறித்து லிம் அதிர்ச்சி தெரிவித்தார்.
அவ்வாறு விசாரிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்பதால் சுகாதாரத் துணை அமைச்சர் ஹில்மி யாஹ்யா சொல்வது ‘முற்றிலும் உண்மையில்லாதது’ என்றும் அவர் சொன்னார்.
“அரசாங்க மருத்துவமனைகள் அனைத்தும் அவரது அமைச்சு, கூட்டரசு
அரசாங்கம் ஆகியவற்றின் பார்வையின் கீழ் வருகின்றன என்பது கூடத்
தெரியாமல் இருக்கும் ஹில்மி சுகாதார துணை அமைச்சர் பொறுப்பை
வகிப்பதற்குத் தகுதியற்றவர்,” என்றும் லிம் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“சுகாதார அமைச்சுக்கு நாங்கள் அறிக்கை அனுப்பும் வரை நடவடிக்கை
எடுக்கப்பட மாட்டாது எனச் சொல்வதின் மூலம் ஹில்மி பொறுப்பைத் தட்டிக் கழித்து மாநில அரசாங்கம் மீது பழி போட முயலுகிறார்.”