மலேசிய உலக அழகிப் போட்டியிலிருந்து விலக்கப்பட்ட மேலும் மூன்று முஸ்லிம் போட்டியாளர்களை ஜாவி எனப்படும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத் துறை விசாரணைக்கு அழைக்கும்.
அந்த அழகிப் போட்டியில் அவர்கள் பங்கேற்பது பாவம் என்றும்
தடுக்கப்பட்டுள்ளது என்றும் கூட்டரசுப் பிரதேச முப்தி வான் ஸாஹிடி வான் தே கூறிய பின்னர் அந்த மூவரும் விசாரிக்கப்படவிருக்கின்றனர்.
நூர் அமிரா ஷேக் நாசிர், வாஃபா ஜோஹானா டி கொர்தே, காத்ரீனா ரெட்சுவான் ஆகியோரே அந்த மூவர்.
போட்டி ஏற்பாட்டாளரான அன்னா லிம், இன்னொரு போட்டியாளரான சாரா அமெலியா முகமட் பெர்னார்ட் ஆகியோருடன் சந்திப்பு நடத்தப்பட்ட பின்னர் விசாரணை நடைபெறவிருக்கிறது.
முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தும் பாத்வாக்கள் குறித்து கேள்வி
எழுப்புகின்றவர்களுக்கு ஒரு நினைவூட்டலாக அந்த விசாரணை அமைவதாக ஜாவி இயக்குநர் சே மாட் சே அலி சொன்னார். இஸ்லாத்தின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.