மகாதீர்: சீனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகின்றனரா அல்லது பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனரா ?

mahathirஇப்போது ‘சீனர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை’   (“Chinese dilemma”) உருவாகியுள்ளதாக முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

மலேசியச் சீனர்கள் அரசியல் அதிகாரத்தை மற்ற இனங்களுடன் பகிர்ந்து கொள்ள  விரும்புகின்றனரா அல்லது முற்றாக அதனைக் கைப்பற்ற விரும்புகின்றனரா என்று  அவர் வினவினார்.

“சுதந்திரம் பெற்ற 50 ஆண்டுகளுக்கு மேலாக சீனர்கள் மலாய்க்காரர்களுடன்  அதிகாரத்தையும் வளப்பத்தையும் பகிர்ந்து கொண்டு வந்துள்ளனர். இப்போது  சிங்கப்பூர் போன்ற மலேசியா என்ற எண்ணம் கவர்ச்சியாகத் தெரிகிறது. பினாங்கு  அதற்கு வழி காட்டி விட்டது.”

“பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சீனர்களுக்கு அரசியல்  அதிகாரத்தையும் கைப்பற்றுவதா அல்லது நாட்டை இன்றைய நிலைக்குக் கொண்டு  வந்துள்ள அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை பின்பற்றுவதா என்ற இக்கட்டான  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.”

இது தான் சீனர்கள் இக்கட்டான சூழ்நிலை,” என மகாதீர் நியூ ஸ்ட்ரெயிட்ஸ்  டைம்ஸில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.