குளியலறை கேண்டீன் சர்ச்சையில் ஆசிரியர் சங்கம் தலையிடுகின்றது

canteenதொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றில் குளியலறை கேண்டீனாக பயன்படுத்தப்பட்டதை  அம்பலப்படுத்திய பெற்றோர்களுடைய பிள்ளைகளான மாணவர்களுடன் தொடர்பு  கொள்ளும் போது ஆசிரியர்கள் தொழில் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும் என  தேசிய ஆசிரியர் தொழிற்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

“ஆசிரியர்கள் தொழில் ரீதியாக செயல்பட்டால் இது நிகழாது,” என அந்த
சங்கத்தின் தலைமைச் செயலாளர் லோக் யிம் பெங்  லேசியாகினியிடம் கூறினார்.

சுங்கை பூலோ ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியின் கேண்டீன் விவகாரத்தை தாம்  வெளியிட்ட பின்னர் ஆசிரியர்கள் தமது புதல்வியை திட்டுவதாக குணேஸ்வரி  கெல்லி கூறியுள்ளது பற்றி லோக் கருத்துரைத்தார்.

ரமதான் மாதத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் குளியலறையில்
அமைக்கப்பட்ட தற்காலிக கேண்டீனில் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக  கூறிக் கொண்டு குணேஸ்வரி அதன் படங்களை ஜுலை 23ம் தேதி தமது முகநூல்  பக்கத்தில் சேர்த்தார்.