“இசி போக்குவரத்து அலவன்ஸை நியாயப்படுத்துவதால் வாக்குகளுக்கு பணம் கொடுப்பது அதிகரிக்கும்”

votersஅண்மையில் முடிந்த கோலா பெசுட் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு  ‘போக்குவரத்து அலவன்ஸ்’ கொடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் (இசி) தவறு  இல்லை எனக் கூறியிருப்பதால் எதிர்காலத் தேர்தல்களில் வாக்குகளை வாங்கும்  நடவடிக்கைகள் பெருகுவதற்கு வழி வகுக்கும் என பாஸ் கட்சி சொல்கிறது.

“தேர்தல் சட்டங்களை அமலாக்கும் பொறுப்பை ஏற்க இசி மறுப்பதுடன்
போக்குவரத்து அலவன்ஸ் கொடுப்பது தவறல்ல என்றும் நியாயப்படுத்துகிறது.” voters1

“ஆகவே எதிர்காலத்தில் ‘போக்குவரத்து அலவன்ஸ்’ என்ற போர்வையில்  தேர்தல்களின் போது அதிகமான ரொக்கம் வழங்கப்படும். அதனால் இறுதியில்  நாட்டின் ஜனநாயக நடைமுறையே பாதிக்கப்படும்,” என பாஸ் உதவித் தலைவர்  மாஹ்புஸ் ஒமார் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

போக்குவரத்துச் செலவுக்குப் பணம் கொடுக்கின்றவர்கள் அதனைப்
பெறுகின்றவர்கள் குறிப்பிட்ட ஒருவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளாத  வரையில் அது குற்றமல்ல என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்  நேற்று தெரிவித்திருந்தார்.