ஜெம்போல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை, போலீஸ்காரர்கள் பற்றி அம்பலமான தகவல்களுடன் முன்னாள் ஐஜிபி பிணைக்கிறார்

musaகுற்றச் செயல் தடுப்பு அரசு சாரா அமைப்பான மை வாட்ச் MyWatch தலைவர்  ஆர் ஸ்ரீ சஞ்சீவனைக் கொலை செய்வதற்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட  முயற்சிக்கும் அண்மையில் அவர் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய  போலீஸ்காரர்களைப் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்தியதற்கும் தொடர்பு  இருக்கலாம் என முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான்  கூறுகிறார்.

“குற்றக் கும்பல்களுடைய நடவடிக்கைகளிலும் சட்ட விரோத நடவடிக்கைகளிலும்  போலீசார் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பான தகவல்களை வெளியிட்டதால்  சஞ்சீவனுக்கு ஏற்கனவே பல மிரட்டல்கள் வந்திருப்பதால் சந்தேகிக்கப்படும்  நபரைக் கண்டு பிடிக்க தீவிரமான புலனாய்வை போலீசார் மேற்கொள்வர் என
நான் நம்புகிறேன்,” என மூசா நேற்றிரவு டிவிட்டரில் செய்தி அனுப்பியுள்ளார்.

நெகிரி செம்பிலான் ஜெம்போலில் நேற்று மாலை மணி 4.39 வாக்கில் சஞ்சீவன்  துப்பாக்கியால் சுடப்பட்டார் என தி ஸ்டார் நாளேடு தெரிவித்தது.

கோலாப் பிலா மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின்னர்  அவரது நிலை சீராக இருப்பதாகவும் ஆனால் கடுமையான நிலையில்  இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.