மலேசியாவில் இணையத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு கடுமையான கட்டத்தை எட்டி விட்டதாக பல்லூடக, தொடர்பு அமைச்சர் அகமட் சாப்ரி சிக் எச்சரித்துள்ளார்.
அதனால் மலேசியாவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைய வசதிகளை மறு ஆய்வு செய்வதற்கு தமது அமைச்சு தயங்காது என அவர் சொன்னார்.
இணையத்தை விவேகமற்ற முறையில் பயன்படுத்துவதால் ஏற்படும் குழப்பத்தை தடுக்க அந்த மறு ஆய்வு உதவும் என அவர் நம்புகிறார்.
கெமாமான் எம்பி-யுமான சாப்ரி கெமாமான் நகராட்சி மன்ற மண்டபத்தில் 261 இமாம்களும் சமய அதிகாரிகளும் கலந்து கொண்ட ரமதான் நிகழ்வில் பேசினார்.
“இணையப் பயனாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது கடுமையான கட்டத்தை எட்டி விட்டதை நான் பார்க்கிறேன். நாம் உறுதியான நடவடிக்கை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது,” என்றார் அவர்.
மலேசியா முதன்மை நாளிதழ்களை தே.மு. உறுப்புக் கட்சிகளின் கையில் வைத்து கொண்டு எத்துனை காலம் தங்கள் அரசியல் பலம் நிலைத்திருக்க உண்மைகளை மூடி பொய்களை விற்று தவறாக பயன்படுத்தினீர்கள்? இதற்க்கு பதில் சொல்லி விட்டு இணையத்தைச் சாடு…!