மை வாட்ச் எனப்படும் குற்றத் தடுப்பு அரசு சாரா அமைப்புத் தலைவர் ஆர் சஞ்சீவன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலையும் தம்மை மடக்குவதற்கு போக்கிரி போலீஸ்காரர்கள் முயலுவதாக அவர் கூறிக் கொண்டுள்ளதையும் முழுமையாக விசாரிப்பதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் வாக்குறுதி அளித்துள்ளார்.
இன்று காலை டிவிட்டரில் அனுப்பிய செய்தி ஒன்றில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எங்கள் விசாரணை ஆழமாக இருக்கும் என நான் சஞ்சீவன் குடும்பத்துக்கும் பொது மக்களுக்கும் உறுதி கூறுகிறேன்,” என அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அந்த விசாரணைகளை புக்கிட் அமான் கண்காணிக்கும் என்றும் குற்றப்புலன் விசாரணைத் துறைத் தலைவர் விசாரணைகளை ‘நேரடியாக மேற்பார்வையிடுவார்’ என காலித் இன்னொரு டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சுடப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக தமக்கு டிவிட்டர் வழி அது குறித்துத் தெரிவிக்கப்பட்டதாக சஞ்சீவன் கூறியதைத் தொடர்ந்து போக்கிரி போலீஸ்காரர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.
போக்கிரிப் போலிஸ்காரர் நாட்டை விட்டு இந்நேரம் ஓடி இருக்க வேண்டுமே! தப்ப வைத்து விட்டு ஆள் பிடிபடவில்லை என்பதில் நீங்கள் பலே கில்லாடி ஆயிற்றே!
இதுவே 56 ஆண்டுகள் அம்னோ ஆட்சியின் வெற்றி. ஆட்சியிலும் பதவியிலும் உள்ளவர்களை பற்றி குறைகளை சொல்லகூடாது….அப்படி சொன்னால் இதுதான் என்று மிரட்டுமளவுக்கு நாட்டை முன்னேற்றி இருக்கிறார்கள். நல்ல ஜனநாயகம்.