‘புதுக் கிராமம்’ ( ‘The New Village’ ) திரையீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

new village‘புதுக் கிராமம்’ ( ‘The New Village’ ) என்னும் திரைப்பட வெளியீடு  தள்ளி  வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படத் தணிக்கை வாரியம் அந்தப் படத்தை மறு ஆய்வு செய்வதற்கான  அதன் திரையீடு ஒத்தி வைக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட்  ஹமிடி தெரிவித்தார்.

அந்தத் திரைப்படத்தின் கரு, செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் மறு ஆய்வு  செய்ய வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.

‘புதுக் கிராமம்’ திரையிடப்படுவதற்கு கடந்த ஆண்டு திரைப்படத் தணிக்கை  வாரியம் வரும் அனுமதி அளித்தது. வரும் ஆகஸ்ட் மாதம் அது  திரையிடப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.new village1

அந்தத் திரைப்படம் கம்யூனிசத்தை பாராட்டுகின்றது எனப் பல அரசு சாரா  அமைப்புக்கள் கூறியுள்ளன. அத்துடன் சமூக ஊடகங்களிலும் அதற்கு எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஹமிடி சொன்னார்.

நேற்றிரவு சுங்கை பூலோ சிறைச்சாலை ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும்  நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.