இசி-யைபோன்று ஆர்ஓஎஸ்ஸும் பிஎன்னின் ஏவலர்போல நடந்துகொள்கிறது

ros logoஉங்கள் கருத்து  ‘டிஏபி உறுப்பினர்கள் பிரிந்து சென்று புதிய கட்சி அமைக்கட்டும், அமைக்காமல் போகட்டும். அரசாங்கப் பணியாளரான ஆர்ஓஎஸ் இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மானுக்கு என்ன வந்துவிட்டது?’.

உறுப்பினர்கள் புதிய கட்சியை விரும்புவதை நிரூபியுங்கள்: ஆர்ஓஎஸ்ஸுக்கு டிஏபி சவால்

ஆரிஸ்46: சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்)  இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மானின் பேச்சு,  பிஎன்னை அண்டிப் பிழைக்கும் அரசியல் தவளை ஒன்றின் கத்தலைப் போன்றிருக்கிறது.

டிஏபி உறுப்பினர்கள்  பிரிந்து சென்று புதிய கட்சி அமைக்கட்டும், அமைக்காமல் போகட்டும். அரசாங்கப் பணியாளரான ஆர்ஓஎஸ் இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மானுக்கு என்ன வந்துவிட்டது?.

டிஏபியின் மத்திய செயல்குழு தேர்தல் மீதான விசாரணை என்னவாயிற்று? அதை ஏன் அப்படியே ஊறப்பட்டு வைத்திருகிறார் அப்துல் ரஹ்மான்?

எஸ்ஆர்மேன்:  ஆர்ஓஎஸ் தலைவருக்கு என்ன ஆயிற்று? பிஎன் அரசியல்வாதிபோல் பேசுகிறார்.  டிஏபி உறுப்பினர்கள் ஏன் புதுக் கட்சி தொடங்க வேண்டும்?.  டிஏபிதான் பொதுத் தேர்தலில் முன் எப்போதையும் விட சிறந்த அடைவுநிலையக் கண்டிருக்கிறதே. அப்துல் ரஹ்மான், கொஞ்சம் அறிவுபூர்வமாக பேசினால் நன்றாக இருக்கும்.

வீரா: யாராவது புதுக்கட்சி தொடங்க நினைத்தால் அவர்கள் மசீச கட்சியினராகத்தான் இருக்க வேண்டும்.

ஷா54:  டிஏபி உறுப்பினர்கள் பிரிந்து சென்று புதிய கட்சி அமைக்க விரும்புகிறார்கள் என்று யார் சொன்னது. ஆர்ஓஎஸ் இயக்குனர் விளக்க  வேண்டும்.

மலேசியன்: அரசுப் பணியாளர்கள் பணி நெறிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும்.

ஆர்கனிஸ்ட்: அம்னோ சார்புள்ள அரசுப்பணியாளர்கள் அப்படித்தான் பேசுவார்கள். லிம், ஆர்ஓஎஸ்மீது வழக்கு தொடுப்பதை வரவேற்கிறேன்.

பரமேஸ்வரா:  த ஸ்டார் நாளேட்டில் வெளிவந்த அந்தச் செய்திகூட ஒரு பொய்யான செய்தியாக இருக்கலாம்.