‘கூடா’ (Kuda) மய்யங்களை மூடுமாறு ‘உத்தரவு’ பிறப்பிக்கப்பட்டுள்ளது

kuda‘kedai mesin kuda’ என அழைக்கப்படும் சட்ட விரோத சூதாட்ட மய்யங்களை  மூடுமாறு நாடு முழுவதும் ‘உத்தரவு’ பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நன்யாங் சியாங்  பாவ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

யார் அந்த உத்தரவைப் பிறப்பித்தது என்பதை அந்தச் செய்தி குறிப்பிடவில்லை  என்றாலும் அது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் நடப்பு ‘விழாக்  காலத்துடன்’ தொடர்புடையது என்றும் அது குறிப்பிட்டது.

அத்தகைய சட்ட விரோத சூதாட்ட மய்யங்கள் சமூகப் பிரச்னைகளை
ஏற்படுத்தியுள்ளதாக அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்தத்
தொழிலைச் சார்ந்துள்ள ஒரு வட்டாரம் தெரிவித்தது.

அண்மையில் மக்களவையில் அந்த விவகாரம் பேசப்பட்டது. நடவடிக்கை  எடுப்பதாக உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடியும் உறுதி  அளித்திருந்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் அந்தத் தொழில் துறையின் ‘உயர் தலைவருக்கு’ தமது  எல்லா மய்யங்களையும் நிரந்தரமாக மூடும்படி கடந்த வியாழக் கிழமை  ஆணையிடப்பட்டதாகவும் நன்யாங் செய்தி கூறிக் கொண்டது.