அம்னோ மகளிர் தலைவி பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு ஷாரிஸாட்டுக்கு வேண்டுகோள்

shaarizatஷாரிஸாட் அப்துல் ஜலில் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி பதவியிலிருந்து  விலகிக் கொள்ள வேண்டும் என அந்தப் பிரிவின் முன்னாள் செயலாளர் பாரிடா  அபு ஹசான் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்தப் பதவிக்கு முன்னாள் புத்ரி தலைவு அஸாலினா ஒஸ்மான் தொடுத்துள்ள  சவாலைத் தடுக்க “தாய்-மகள் உறவுகளில் பிளவு” போன்ற காரணங்களைப்  பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் ஷாரிஸாட்டுக்கு ஆலோசனை கூறினார்.

ஷாரிஸாட் ஒரு காலத்தில் அப்போதைய தலைவி ராபிடா அஜிஸை எதிர்த்துப்  போட்டியிட்டதை பாரிடா நினைவு கூர்ந்தார்.

அத்தகைய போட்டிகள் மகளிர் பிரிவை பிளவுபடுத்தியதில்லை என்றும் இப்போது  ஏன் போட்டியிட வேண்டாம் என ஷாரிஸாட்  ஸாலினாவிடம் சொல்கிறார்  என்றும் அவர் வினவினார்.

ஷாரிஸாட் போட்டியிடக் கூடாது என்பதற்கு மேலும் இரண்டு காரணங்களையும்  பாரிடா குறிப்பிட்டார். 250 மில்லியன் ரிங்கிட் கடன் கொடுக்கப்பட்ட தேசிய  விலங்குக் கூட நிறுவன விவகாரம், அம்னோ மகளிர் பிரிவின் மோசமான அடைவு  நிலை ஆகியவையே அவை.