வலிய கூட்டத்துக்கு எதிராக தன்னந் தனியராக பழனிவேல்

micஜி. பழனிவேலும் டாக்டர் எஸ். சுப்ரமணியமும் மோதத் தயாராகும் மஇகா தேர்தல் பேரார்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்போதைக்குத் தேர்தல் களத்தில் பழினிவேல் தன்னந்தனியாக நிற்பதுபோல் தெரிகிறது. அவருக்கு எதிராக சுப்ரமணியம், வி. சரவணன் தலைமையில் வலுவான அணி ஒன்று திரண்டுள்ளது.

சரவணன், பழனிவேலைக் கவிழ்க்கும் பரப்புரையில் முழுமூச்சாக இறங்கியுள்ளார். அவர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

சுப்ரமணியம் அணியில், உதவித் தலைவர் எஸ்.கே. தேவமணி, இளைஞர் தலைவர் டி.மோகன், முன்னாள் இளைஞர் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், முன்னாள் செயற்குழு உறுப்பினர் எஸ்.வேள்பாரி, கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.

சுப்ரமணியத்தின் அணியைப் பின்னணியிலிருந்து முடுக்கி விடுபவர் முன்னாள் தலைவர் எஸ். சாமிவேலு என்று கூறப்படுகிறது.

மறுபுறம், பழனிவேல் தன்னந்தனியாக நாடு முழுக்க பயணம் செய்து கிளைத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இதுவே பலவீனத்தின் அறிகுறி எனக் கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.