தடுப்புக்காவலில் இறந்துபோன என். தர்மேந்திரன் வழக்கில் சம்பந்தமுள்ளவர் எனச் சந்தேகிக்கப்படும் நாலாவது நபரான இன்ஸ்பெக்டர் எஸ். ஹரிகிருஷ்ணன் எங்கும் தப்பியோடவில்லை என அவரின் துணைவியார் இன்று கூறினார்.
இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், விடுப்பில் இருந்த ஹரிகிருஷ்ணன் விடுப்பு முடிந்ததும் வேலைக்குத் திரும்பவில்லை என்று ஷார்மினி பாலகிருஷ்ணன்(படத்தில் வலம் இருப்பவர்) மலேசியாகினியிடம் கூறினார்.
ஹரிகிருஷ்ணன் தம் வழக்குரைஞர் மூலம் பல கடிதங்கள் அனுப்பினார்.
“எதற்கும் பதிலில்லை. அவர் எங்கும் தப்பி ஓடவில்லை”, என்றார்.
தர்மேந்திரன் வழக்கில் தாம் குற்றமற்றவர் என்பதைத் தெரிவித்து ஹரிகிருஷ்ணன் சத்தியபிரமாணம் ஒன்றைச் செய்திருப்பதாகவும் ஷார்மினி கூறினார்.
இவ்வளவு நாள் எங்கே போய் இருந்தீர்கள் அம்மா ???
இறைவனின் தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது !
உப்பை தின்றவன் தண்ணீரை குடிக்கத் தானே வேண்டும்.
போலீஸ் சீருடையை அணித்து விட்டால்,
அப்பப்பா என்ன ஆர்ப்பாட்டம், என்ன ஆணவப் பேச்சு,என்ன அட்டகாசம்!!!
போலீஸ்காரர்களே முன்னாள் தலைமை இன்ஸ்பெக்டர் ரஹீம் நோர் நிலையை மறந்து விடாதீர்கள்!!
போலீஸ் துறையில் இருப்பவர்களுக்கு ரஹீமின் நிலை ஒரு நல்ல படிப்பினை! உணருங்கள். …..