தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த என் தர்மேந்திரன் கொலையில் தாம் மாட்டிவிடப்படுவதாக இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் கூறிக் கொண்டுள்ளது பற்றி விசாரிக்கப்படும் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் கூறுகிறார்.
“நாங்கள் அதனை புலனாய்வு செய்வோம். நான் ஏற்கனவே சொன்னது போல நாங்கள் எல்லாப் போலீஸ் புகார்களையும் விசாரிப்போம்.”
“ஆனால் உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு அவர் முதலில் முன் வரவேண்டும். இப்போது அவர் முன் வந்துள்ளதால் நாங்கள் உண்மையைக் கண்டு பிடிப்போம்,” என காலித் புக்கிட் அமான் கூட்டரசுப் போலீஸ் தலைமையகத்தில் இன்று நிருபர்களிடம் கூறினார்.
தர்மேந்திரன் கொலைக்கு தமக்கு எதிராகத் தவறாகக் குற்றம் சாட்டப்படுவதாக ஹரி செய்து கொண்டுள்ள போலீஸ் புகார் பற்றி அவர் கருத்துரைத்தார்.
நீர் பதவியில் இருந்த போது எத்தனைப் பேரை மாட்டி விட்டீரோ? பாதிக்கப் பட்டவர்களுக்கு தானே தெரியும்!!!
‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ …
அது இயற்கையின் நீதி.
மக்கள் மறக்கும் வரை புலனாய்வு செய்துக்கொண்டே இருப்பார்கள். மக்கள் மறந்தபின்பு புலனாய்வு செய்வதை விட்டுவிடுவார்கள்.