ஆர்.ஸ்ரீசஞ்சீவன்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சிக்குப் போலீசைக் குறை சொல்ல வேண்டாம் என தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“மைவாட்ச் தலைவர் சுடப்பட்டதற்கு போலீஸ்தான் காரணம் என்று அவசரப்பட்டு குற்றம் சாட்டாதீர்கள்”.
இன்று காலை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் காலிட் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் போலீசார் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை விடப்போவதில்லை என்றாரவர்.
“குற்றம் செய்த எவரையும் நாங்கள் பாதுகாத்ததில்லை.
“சஞ்சீவன் விரைவில் குணமடைய வேண்டும். அப்போதுதான் அவரைச் சந்தித்து தகவல் பெற முடியும்”, என்று அவர் மேலும் கூறினார்.
குற்றம் செய்யும் எவரையும் போலிஸ் பாதுகாக்க வில்லையா? கிள்ளான் வட்டாரத்தில், அதுவும் தாமான் செந்தோசாவில், வியாபாரம் செய்யும் கடைகளில், புதியதாக வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் பாதுகாப்பு பணம் கேட்டு மிரட்டியும், குண்டர் கும்பலுக்கு தலைமை இடமாக அதன் தலைவன் அங்குதான் முகாம் இட்டு இருக்கானாம். இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாதம், இவர்களுக்கு புக்கிட் அமான் வரை தொடர்பு இருக்கிறது என்று அந்தக் கும்பலை சேர்ந்த சில குண்டர்கள் பேசிக் கொண்டதை என் காதால் கேட்டு அதிர்ந்து போனேன். முன்னால் நாடாளமன்ற உறுப்பினர் தம்பியும் அந்த வட்டாரத்தை கலக்கி வருவதாகவும் செய்தி.
காவேரி நீ கலக்குமா…!
மலேசியா போலிஸ் சூப்பர் டா எல்லா மலேசியர்களுக்கு அந்த ஆண்டவன்தான் துணை
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்,மறுபடியும் தர்மம் வெல்லும்!காத்திருந்து பாப்போம்!
நம் நாட்டு போலீசாரின் நேர்மை, திறமை பற்றி நமக்கு நன்றாகத்தெரியும், உண்மையான குற்றவாளிகள் அவர்களிடமிருந்து தப்பமுடியாது.
‘குற்றம் செய்த எவரையும் நாங்கள் பாதுகாத்ததில்லை’. நீங்கள் சொல்வதை நாங்கள் இன்னுமா நம்பனும்னு என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்!
போலிஸ் பேசுவதற்கு நிறைய இருக்கு ,திருடனை பற்றி புகார் செய்தால் எங்களுக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்று சொன்ன கதை கேரி தீவில் அரங்கேறி இருக்கிறது ,25 ஆண்டுகள் தன்ன தனியாக பாடு பட்டு அரசாங்க நிலத்தில் செம்பனை பயிர் செய்து ,அதற்கான அறுவடை உரிமத்தை 2016 வரை பெற்று உள்ளார் ஒரு தனித்து வாழும் பெண் .கடந்த ஒரு வருடமாக அந்த நிலத்தில் இந்த பெண்மணியை நுழைய விடாமல் அந்த நிலத்தில் விளையும் செம்பனை பழங்களை ஒரு கும்பல் திருடி வித்து வருகிறது .இதை பற்றி போலீசில் அந்த பெண் பல முறை புகார் செய்தும் போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அந்த நிலத்தை தற்பொழுது அந்த குண்டர் கும்பல் ஆகிரமித்து அங்கேயே முகாம் இட்டு உள்ளது.
என்னாது! நம் நாட்டு போலீஸ் நேர்மையானவர்களா?
அந்த பெண்மணியிடம் போலிஸ் கூறிய காரணம் எனக்கு அதிர்ச்சியை தந்தது ,போலிசுக்கு நடவடிக்கை எடுக்கும் உரிமை இல்லை என்று ,காரணம் அந்த பெண் நிலத்தின் உரிமையை பெற வில்லை என்று .என்னுடைய கேள்வி இதுதான் ,அந்த பெண் அந்த நிலத்தில் விளையும் செம்பனை அறுவடைக்கு முறையான உரிமையை வைத்து உள்ளார் .அந்த அரசாங்க நிலத்தில் 20 பேர் அறுவடை செய்கிறார்கள் ,அவர்கள் அனைவரும் அந்த நிலத்தை அளவு இட்டு அந்த நிலத்தின் உரிமை பெற அங்குள்ள சட்ட மன்ற உருப்பினரிடம் வழி நில அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர் .அந்த பெண் தன் நிலத்தை அளக்கும் செலவுகளை தனே ஏற்று உள்ளார் அதற்கான ஆதாரத்தையும் போலீசிடம் வழங்கி உள்ளார், ஆனால் இதுவரையில் போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை .இதுதான் போலிசின் தர்மமா .அப்பாவி பெண்ணின் உழைப்பையும் உண்மையும் மறுக்க பட்டு ,அந்த கும்பலுக்கு துணை போகும் போலிசை என்ன வென்று சொல்லுவது
கலக்கும் காவிரிக்கு சரணம்! லஞ்சம் என்னும் வார்த்தை உங்கள் புத்தகத்தில் இல்லையா? யார் அதிமாக லஞ்சம் கொடுக்க முடியுமோ அவர்களுக்கே காவல் தரப்படும் என்பதில் எனக்கு சிறுதளவும் சந்தேகம் இல்லை.
உண்மையாகவா சொல்றிங்க ,அப்ப இந்த செம்பனை குலை திருட்டில் கூட போலிஸ் உடந்தையா இருக்குன்னு சொல்றிங்களா தேனீ அண்ணாச்சி ?
காவேரி.. எப்படிம்மா எல்லா குண்டர் கும்பல் முகாம்களையும் பட்டியல் போட்டு வெச்சிருக்கே.. இங்கே சிறம்பான் போலிஸ் ரொம்ப உஷார்மா.. எங்கேயுமே முகாம் போட முடியல.. அதனால எல்லா குண்டர்களும் ட்ராபிக் லைட் லே தான் வெயிட் பன்னி வேண்டாதவங்கள சுட வேண்டியிருக்கு..
நம் உரிமையை நம் கையில் கொடுத்தும்
அதை கோட்டை விட்டு விட்டோம் ” காவேரி ”
என்னுடைய கண்டு பிடிப்பில் ,கிள்ளான் வட்டாரத்தில் பொதுவாக ,கிளாங் ஜெயா ,தாமான் செந்தோசா ,ஸ்ரீ அண்டலாஸ் ,புக்கிட் கேமுநிங் ,வட்டாரத்தை ஒரு கும்பல் கலக்கி வருகிறது ,அங்குள்ள பெரும் வியாபாரிகள் அந்த கும்பலுக்கு பாதுகாப்பு பணம் கட்டி வருகின்றனர், பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாரும் இதை பற்றி புகார் செய்வது இல்லை. அண்மையில் ஒரு நண்பர் தாமான் செந்தோசாவில் புதியதாக ஒரு கடையை திறந்து உள்ளார், கடைக்கு பூஜை போட்ட அரைமணிநேரத்தில் அந்த கும்பல் அந்த நபரிடம், மாதம் மாதம் ஒரு தொகை கொடுக்க வேண்டும், திபாவளிக்கு 2000 வெள்ளி கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசி உள்ளது. பாவம் அந்த நபர் 3 மாதத்தில் கடையை மூடிவிட்டு, கடையை திறக்க வாங்கிய பணத்தை கட்டவே ரொம்ப கஷ்டம் படுகிறார்.