குளியலறை சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் ஓயவில்லை. அதற்குள் ஷா ஆலம் இடைநிலைப் பள்ளி ஒன்றில் கடந்த திங்கள்கிழமை ஒரு தலைமையாசிரியர் மாணவர்களை இன ரீதியாக இழிவுபடுத்தியுள்ளார்.
“தாம் உரையாற்றிக்கொண்டிருந்தபோது மாணவர்கள் அதிகம் சத்தமிட்டதால் தலைமையாசிரியர் சினமடைந்தார்.
“எல்லா மாணவர்களையும் திட்டிய அவர் இந்திய, சீன மாணவர்களை நோக்கி ‘Balik India dan China'(இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிப் போ) என்று கத்தினாராம்”, என்று ஷா ஆலம் மஇகா தொகுதி துணைத் தலைவர் ஏ.பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.
உண்மை நிலவரத்தை அறிய பிரகாஷ், ஒரு குழுவுடன் இன்று காலை பள்ளி சென்றார். ஆனால், தலைமையாசிரியர் விடுப்பில் சென்றுவிட்டார்.
இவர்களுக்கு இப்படியெல்லாம் பேச எங்கிருந்து தைரியம் வந்தது? இப்படியெல்லாம் பைத்தியம் பிடித்தவனைப்போல் பிதற்ற காரணம் என்ன? இந்த போதனைகள் இவர்களுக்கு எங்கிருந்து வழங்கப்படுகிறது? அதிகாரம் தங்கள் கைகளில் இருக்கிறது என்ற அகந்தையா?அல்லது திமிரா? முடிதாங்கிய மன்னரெல்லாம் பிடிசாம்பலானார்கள் என்ற உண்மையெல்லாம் அறியாத மூடனா? அறிவிளியாளனா?
இன்னும் என்னெவெல்லாம் அவமானம் நமக்கு வந்து சேரும்…?
இதையெல்லாம் பார்த்தும் நாம திருந்தலனா…. அப்பரம் நம்மல யாராலும் காப்பாத்த முடியாது…!
எங்களுக்கும் இந்நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி இந்நாட்டில் வாழ முழு உரிமை இருக்கு! நீங்க யாரப்பா எங்களை விரட்டுவதற்கு?
வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விட்டது. அந்த துணை அமைச்சர் காட்டமாக நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த புது பிரச்னை தலை தூக்கி இருக்காது.
5 கிலோ அரிசி, 1 கிலோ ஆட்டு எலும்பு, இருபது ரிங்கிட், பொங்கலுக்குப் பானை வாங்கிட்டு சமுதாயத்தையே அடமானம் வெச்சிட்டோமில்லே. இப்போ கதறி என்னத்த பண்ண? ஓட்டுப் போட்டு ஜெயிக்கவெச்சிட்டோமில்லே அதனால தான் பின்னால ஆப்பு வைக்கறானுங்க. நான் உங்க பிரதமர். என் மேல் நம்பிக்கை வையுங்க, ஒரே மலேசியா என்றெல்லாம் தேர்தலுக்கு முன் பாட்டுப் பாடினாரே அவர் எங்கே போய்விட்டார்? ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாரா? அடுத்த பொதுத் தேர்தலுக்காவது முழிப்பாரா? தேர்தல் மிடிஞ்சி முழுசா மூனு மாசம் முடியலே…அதுக்குள்ளே தமிழ் பள்ளிப் பிரச்சினை, கோயில் உடைப்பு, தேசியப் பள்ளி தமிழ் மாணவர் பிரச்சினை, மதமாற்றுப் பிரச்சினை, உயர்கல்வி வாய்ப்பு ஏய்ப்பு, பாலே இந்தியா இப்படி எத்தனையோ..தாங்கலேடா பத்துமலை முருகா, பழனியாண்டவா சுப்ரமணியனே, சரவணனே…!
வேதமூர்த்தி, பழனிவேல், சரவணன், சுப்ரமணியம் இதுக்கெல்லாம் கொஞ்சம் வாயைத் திறந்து குரல் கொடுங்கள்…!
வாயில வாழைப் பழத்தை வச்சிகிட்டு முழுங்க முடியாம இருக்கிரவுங்களைப் பார்த்து குரல் கொடுக்க சொல்லுரிங்களே, அவுங்களாலே முடியுமா?
கடந்த தேர்தலில் பி என் னுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்கவைததற்க்கு நமக்கு கிடைக்கும் பரிசு இது.
குளியலறை சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் ஓயவில்லை. அதற்குள் ஷா ஆலம் இடைநிலைப் பள்ளி ஒன்றில் கடந்த திங்கள்கிழமை ஒரு தலைமையாசிரியர் மாணவர்களை இன ரீதியாக இழிவுபடுத்தியுள்ளார்.
“தாம் உரையாற்றிக்கொண்டிருந்தபோது மாணவர்கள் அதிகம் சத்தமிட்டதால் தலைமையாசிரியர் சினமடைந்தார்.
“எல்லா மாணவர்களையும் திட்டிய அவர் இந்திய, சீன மாணவர்களை நோக்கி ‘Balik India dan China’(இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிப் போ) என்று கத்தினாராம்”,
சூடு சொரனை உள்ள நம் தலைவர்கள் குறிப்பாக துணைக்கல்வி அமைச்சர் இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமே ! எடுப்பாரா ! நாம் எடுப்பார் கை பிள்ளை !
நம்பிக்கை தெய்வத்தை கூப்பிட்டு நபிக்கை என்றால் என்ன என்று கேளுங்கள்?எங்கே உங்கள் தெய்வம் பள்ளியறையில் இன்னும் நித்திரையில் இருக்கிறாரோ நம்பிக்கை கிடைத்த நிறைவில்.
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையட
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு
தேர்தலில் ஓட்டுப் போட்டு வெற்றிப் பெற வைத்ததற்கு கிடச்ச பரிசு …………
இன்னும் நிறைய கிடைக்கும் நம் சமுதாயத்திற்கு……
நம் தலைவர்கள் எங்கே ?????????????
“பாலேக் இந்தோனேசியா” என்று ஒரு வார்த்தையும் சேர்த்திருந்தால் இது போன்ற பிரச்சனைகள் எழுந்திருக்காது!
வேதமூர்த்தி, பழனிவேல், சரவணன், சுப்ரமணியம், வாயை மூடிக் கொண்டு, இருப்பது, மானக்கேடு! கொஞ்சம் உங்கள் பொன்னான வாயைத் திறந்து ஏதாவது குரல் கொடுங்கப்பா…!
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த அறிவுகெட்ட தலைமை ஆசிரியர்களையும் பல்கலைகழக துணை வேந்தர்களையும் நினைத்தால்!!!!! தமிழ் குண்டர்களே!தமிழர்களை குறிவைத்து தாக்குகின்ற நீங்கள் இதற்கொரு பதில் கூறுங்கள்.
குத்தூசி சொல்வது உண்மைதான்.. பி என் னுக்கு ஓட்டு போடும்போது சுகம்மா இருந்துச்சில்லே.. இப்போ படுங்க.. இன்னும் இலங்கையில போட்ட மாதிரி போட்டாகூட நம்ம இனத்துக்கு புத்தி வராதய்யா..
இந்தியர்களுக்கு அவர்கள் வாக்குகளின் மதிப்பு தெரியாது! இது தான் உண்மை வீர பாண்டிய கட்டபொம்மனை காட்டி கொடுத்தவன் ஒரு இந்தியன் தான் இதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்! ஒருத்தன் குரல் கொடுத்து எந்தவேளையும் ஆகாது மறுநாலே அங்கே தர்ணா போராட்டம் செய்து இருக்க வேண்டும்!
திருக்குறள் , ஆத்தி சூடி , உலக நீதி போன்ற நூல்களை ஏதும் படித்து இருந்தால் கொஞ்சமாவது இங்கிதம் தெரியும் .. யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று .. போயும் போயும் பள்ளி மாணவர்களிடம் இப்படி பேசி இருக்கானே ..அவர்கள் திரும்ப பதில் கொடுக்க மாட்டார்கள் என்கிற தைரியம் தானே …
தமிழனுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வரமேட்டேங்குது…!
சீன தமிழ் பிள்ளைகளை ஏசினால் உடனே அப்பள்ளிக்கு நிதி கிடைக்குது இதுவும் அரசாங்க KPI பெருமாற்றதில் ஒரு தெருமாற்றம் போலும் !
இதுவெல்லாம் பத்தாதுடா நம் மக்களுக்கு ” ஹ -ஹ -ஹ
இன்னும் நிறைய காத்திருக்கு பொறுத்திருந்து பார்ப்போம் ……………..
எதிர்கட்சிக்கு ஒட்டு போட்டவன் முட்டாளாம் ,,
துரோகியாம் ,, நன்றி கெட்டவனாம் ,, அப்படி சொன்ன தமிழனைஎல்லாம் இப்போ வந்து ………………………………….சொல்லுங்க ??
நான் ரொம்ப அசிங்கமா சொல்ல புடிக்கலங்க .
அம்னோகாரன்களை தாற்காக்கும் மக்களால் புறக்கனிக்கப்பட்ட மஇகா காரன்களுக்கு சூடு சொரணை இருந்தால் அம்னோகாரன்களை கேட்கட்டும்… நம்மல என்ன சொன்னாலும் ஆமாசாமிபோட்டுக்கிட்டே இருப்பான்கள்!
இந்திய சமுதாயமே…. திருந்திடுங்க…
ஆசிரியர் நல்லா இருந்தா மாணவர்கள் சுட்டித் தனம் செய்றாங்க, மாணவர்கள் நல்ல பிளைகளா இருந்தா ஆசிரியர் திமிர் பிடிச்சு ஆடுறாங்க. பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க இல்லேன்னா விட்ருங்க இது போன்ற சம்பவங்கள் தொடரும். பெற்றொர் கையிலேயே விட்டுருங்க!