பி. உதயகுமாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஒரு நாளேட்டிலும் வலைப்பதிவிலும் வெளிவந்த தகவலை சிறைத்துறை மறுத்துள்ளது.
உதயகுமார் நீதிமன்றத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி என்று சிறைத்துறை கொள்கைப்பிரிவு துணை இயக்குனர் சுப்ரி ஹஷிம் கூறினார்.
மற்ற கைதிகள் போலத்தான் அவரும்.
“சிறை மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக்கு ஏற்ப அவருக்கு மருத்துவ சிகிச்சையும் மற்ற சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன.
“மற்ற கைதிகளுக்கு என்ன மருத்துவ உரிமைகள் உண்டோ அவை உதயகுமாருக்கும் உண்டு. நீரிழிவு நோயாளி என்பதால் அவருக்கு சிறப்பு உணவும் கொடுக்கப்படுகிறது”, என்றார்.
மே 5-க்கும் ஜூலை 23-க்குமிடையில் சிறை மருத்துவர்களாலும் வெளி மருத்துவர்களாலும் ஒன்பது தடவை அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
உதயகுமாரின் துணைவியாரும் மற்றவர்களும் தவறான அறிக்கைகள் விடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சுப்ரி கேட்டுக்கொண்டார்.
-பெர்னாமா