இரண்டு அமைச்சர்களும் மூன்று துணை அமைச்சர்களும் செனட்டர்களாகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கு முன்னரே நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்புவதற்கு அனுமதி கோரி டிஏபி ஈப்போ பாராட் எம்பி எம் குலசேகரன் சமர்பித்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஸாலேஹா யூசோப் நிராகரித்துள்ளார்.
நியமனங்களும் பதவி ஏற்பு சடங்குகளும் இரண்டு வெவ்வேறான விஷயங்கள் என அவர் சொன்னார்.
“பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கு முன்னர் நியமனம் நிகழவேண்டும் என பிரதிவாதிகள் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன்,” என ஸாலேஹா தெரிவித்தார்.
“ஆகவே குலசேகரன் சமர்பித்த விண்ணப்பத்தை செலவுத் தொகை ஏதும் இல்லாமால் நான் தள்ளுபடி செய்கிறேன்.
அந்த இரண்டு அமைச்சர்கள், மூன்று துணை அமைச்சர்கள் சார்பில் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் ஆஜரானார்.
அந்த ஐந்து பேரும் முதலில் அகோங் முன்னிலையில் அமைச்சர்களாக அல்லது துணை அமைச்சர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்களது நியமனத்தின் அடிப்படையில் அவர்கள் செனட்டர்களாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கடந்த 57 ஆண்டுகளாக செனட்டர்கள் தங்களது அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளும் முன்னர் செனட்டர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டு வந்துள்ளனர் என குலசேகரன் குறிப்பிட்டார்.
குலாவின் வழக்கு தவறு உள்ளது. வேதா மற்றும் வாஹித் ஜூன் 5ஆம் தேதி காலையில் முதலில் செனட்டர் பதவி ஏற்ற பின்பு அன்று மாலைதான் அமைச்சர் பதவி ஏற்றனர்.