அதிகார அத்துமீறல் தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் மூன்று முன்னாள் உயர் அதிகாரிகள் கைது

sprmபல மில்லியன் ரிங்கிட் பெறும் உணவுத் தொழில் திட்டம் சம்பந்தப்பட்ட அதிகார  அத்துமீறல் எனக் கூறப்படுவது மீதான விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய  ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம்  ஒன்றின் மூன்று முன்னாள் உயர் அதிகாரிகளைக் கைது செய்துள்ளது.

அந்த மூவரும் நிறுவனத்தில் இயக்குநர், தலைமை நடவடிக்கை அதிகாரி, தலைமை  நிர்வாக அதிகாரி என்ற பதவிகளை வகித்து வந்தவர்கள் என எம்ஏசிசி  விசாரணைப் பிரிவு இயக்குநர் முஸ்தாபார் அலி கூறினார்.

“அவர்களுடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள்
விடுவிக்கப்பட்டனர்,” என்றும் அவர் நேற்றிரவு விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.sprm1

கோலாலம்பூரிலும் ஜோகூர் பாருவிலும் கைது செய்யப்பட்ட அந்த மூவரும் தலா  500,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன விவகாரத்தைப் போன்ற அந்த  விஷயத்தில் எம்ஏசிசி தொடங்கிய புலனாய்வுகள் அந்த மூவர் கைது  செய்யப்பட்டதுடன் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் முஸ்தாபார் சொன்னார்.