போலீஸ் படை குற்ற-எதிர்ப்பில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர பிஎன்னின் அரசியல் எதிரிகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.
இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், குற்றத்தடுப்பில் ஈடுபட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கையை 14 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குறைந்தது 56,000 போலீஸ்காரர்களாவது சாலைகளில் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
“நேற்று நடந்த மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குற்றச்செயல்கள் உயர்ந்து வருகிறது என்பது வெறும் கற்பனை அல்ல என்பதையும் (அதைத் தடுப்பதில்) போலீஸ் தோற்றுபோனது உண்மை என்பதையும் மெய்ப்பிக்கின்றன.”, என்றவர் கூறினார்.