துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பெருகி வருவதைத் தொடர்ந்து மலேசியாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதோ என என்ஜிஓ-களின் கூட்டணி ஒன்று கவலை கொண்டுள்ளது.
மலேசியா பாதுகாப்பான நாடு என்ற கருத்தைத் துப்பாக்கிக் குண்டுகள் தவிடு பொடியாக்கிவிட்டன.
“உள்துறை அமைச்சும் போலீசும் நாடு பாதுகாப்பாக இருப்பதாக சொல்கின்றன. ஆனால், மக்கள் பயப்படுகிறார்கள். ……உணவகமோ, போக்குவரத்து விளக்கு உள்ள இடங்களோ, எல்லா இடங்களிலும் அபாயம் காத்துக்கொண்டிருப்பது போல் தெரிகிறது”, என்று மலேசிய இந்தியர் முன்னேற்றச் சங்க (மிபாஸ்) தலைமைச் செயலாளர் எஸ்.பாரதிதாசன் வினவினார்.
“வளர்ந்த நாடு என்ற 2020 இலக்கை அடைய வேண்டுமானால் சாலைகள் மலேசியர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் பாதுகாப்பானவையாக இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்”, என்றாரவர்.
உண்மை;நான் மோட்டார்சைக்கிளில் வெளியே செல்லவும்,பினாங்கில் காற்று வாங்க நடமாடவும் பயப்படுகிறேன்.இப்பொழுதெல்லாம் சிலருக்கு சுடும் ஆயுதம் சுலபமாக கிடைத்துவிடுவதால்,கொள்ளை,கொலை சர்வசாதாரணமாகிவிட்டது.காவல் துறை மக்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் தரவேண்டும்.