சிலாங்கூர் அம்னோ: கேண்டீன் பற்றிய தகவல்களை வெளியிட்டவர்களை தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரியுங்கள்

schoolஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளி குளியலறை கேண்டீன் சர்ச்சையை  பெரிதுபடுத்தியதற்குப் பொறுப்பான பெற்றோர்களை 1948ம் ஆண்டுக்கான  தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனச் சிலாங்கூர்  அம்னோ கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வாறு வேண்டுகோள் விடுத்த சிலாங்கூர் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர்  நோ ஒமார், அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியர் நல்ல முறையில் சேவை  செய்வதால் அவருக்கு எதிராக மாநிலக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கக்  கூடாது என்றும் வலியுறுத்தினார்.school1

அந்த விவகாரம் ‘திரிக்கப்பட்டு’ ‘பொருத்தமில்லாமல் பயன்படுத்தப்பட்டதால்’  தலைமை ஆசிரியருக்கு கொலை மருட்டல்கள் வந்துள்ளன என நோ சொன்னதாக  உத்துசான் இணையப் பதிப்பு தெரிவித்தது.

அந்த சர்ச்சைக்குப் பொறுப்பான பெற்றோர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்  என்றும் அந்த அம்னோ தலைவர் கோரினார்.