‘balik India, China’ விவகாரத்தில் விரைவான நடவடிக்கை தேவை என கெராக்கான் வலியுறுத்துகின்றது

kogilan pillaiதமது பள்ளிக்கூடத்தில் உள்ள சீன, இந்திய மாணவர்களை ‘இந்தியாவுக்கும்  சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்’ எனக் கூறிய தலைமை ஆசிரியையை  உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு கெரக்கான் உதவித் தலைவர் ஏ கோகிலன் பிள்ளை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த தலைமை ஆசிரியை அந்த வார்த்தைகளை சொல்லியிருப்பதை  விசாரணைகள் கண்டறிந்தால் அவரை நீக்கவும் வேண்டும் என்றார் அவர்.

‘முதலில் நாம் மலேசியர்கள் என்ற தேசிய அடையாளத்திற்கு முரணாக’ அது  இருப்பதால் தான் இனவாதத்தை சகித்துக் கொள்ளப் போவதில்லை என்பதைக்  காட்டுவதற்கு அரசாங்கம் அந்தச் சம்பவம் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க  வேண்டும்,” என்றார் அவர்.