‘புதுக் கிராமம்’ திரைப்படத்தில் கம்யூனிசத்தைப் புகழும் அம்சங்கள் உண்மையில் இருந்தால் அதனை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் எனப் பெர்க்காசா கூறுகின்றது.
“அந்தத் திரைப்படத்தில் கீழறுப்பு அம்சங்கள் இருந்து அது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியை மேம்படுத்தினாலும் அதனைப் புகழ்ந்தாலும் அது முற்றாகத் திரையிடப்படுவதிலிருந்து தடை செய்யப்பட வேண்டும்,” என சிலாங்கூர் பெர்க்காசா தலைவர் அபு பாக்கார் யாஹ்யா சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியை சுதந்திரப் போராட்ட வீரர்களாகச் சித்தரிக்கும் எந்த முயற்சியும் வரலாற்று உண்மைகளை திசை திருப்பும் முயற்சி என்றும் அவர் சொன்னார்.
கம்யூனிச கால கட்டத்தில் சித்தரிக்கப்படும் காதல் கதையே ‘புதுக் கிராமம்’ என அந்த திரைப்படத்தை தயாரித்தவர் முகநூல் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
நம் நாடு சுபீட்சமாக, ஒற்றுமையாக, “அன்று கண்ட அதே மலாயாவாக” இருக்க வேண்டும்னா பெர்க்காசா அமைப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த தவளைகலாலேயே குழப்பங்கள், இன பிரிவுகள் உண்டாகின்றன!!