பல ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர் யனேஷாவுக்குக் குடியுரிமை கிடைத்தது

1 yanesahஎன்.யனேஷா,  நாடற்றவராக இருந்த நிலை பத்தாண்டுப் போராட்டத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது.

தேசியப் பதிவுத்துறை (என்ஆர்டி) அவருக்கு குடியுரிமையும் அடையாள அட்டையும் வழங்கி உள்ளதாக அவரின் வழக்குரைஞர் அன்னவ் சேவியர்(இடம்)  உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரோசிலா 1 xavierயோப்பிடம் தெரிவித்தார்.

“ஆனால், அவரின் பிறப்புச் சான்றிதழில் மட்டும் குடியுரிமை-அற்றவர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது”,  என்றாரவர்.

அதில் திருத்தம் செய்யுமாறு நீதிபதி என்ஆர்டி-க்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

யனேஷாவின் தந்தை மலேசியர். தாயார் பிலிப்பினோ. இதனால் என்ஆர்டி அவருக்குக் குடியுரிமை கொடுக்காதிருந்தது.