அவதூறு கூறியதற்காக ஆர்பிகே ரிம 300,000 கொடுக்க உத்தரவு

1 rpkமலேசியா டுடே வலைப்பதிவு ஆசிரியர் ராஜா பெட்ரா கமருடின் (ஆர்பிகே), மூத்த வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு  ரிம300,000 இழப்பீடு கொடுக்க வேண்டும் என கோலாலும்பூர் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008-இல், ஆர்பிகே அவரது வலைப்பதிவில் வெளியிட்டிருந்த  மூன்று கட்டுரைகள் தொடர்பில் அவருக்கு எதிராக ஷாபி வழக்குத் தொடுத்திருந்தார்.