துணைப் பிரதமர்: இஸ்லாத்தைப் பழித்துரைப்பது நாட்டில் பதற்றத்தை உருவாக்கும்

UMNO-muhyiddinமுஸ்லிம்களை ஆத்திரப்படவைக்கும் செயல்கள் நிற்காவிட்டால் மற்ற முஸ்லிம் நாடுகளில் நடப்பதுபோல் இங்கும் நெருக்கடி நிலை உருவாகலாம்.

இவ்வாறு எச்சரித்துள்ள துணைப்பிரதமர் முகைதின் யாசின், அமைதியை அனுபவிக்கும் ஒரு நாட்டில் அப்படிப்பட்ட நிலை உருவாகக் கூடாது என்றார்.

“இது, சமுதாயத்தில் ஆழ்ந்த புரிந்துணர்வு இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது. முஸ்லிம்கள் கிறிஸ்துவத்தையோ இந்து சமயத்தையோ இழிவுபடுத்துவதில்லை.

“ஆனால், முஸ்லிம்-அல்லாதார் நம் சமயத்தை இழிவுபடுத்துகிறார்கள்”. நேற்று புத்ரா ஜெயாவில் நோன்பு திறக்கும் நிகழ்வு ஒன்றில் துணைப் பிரதமர்  இவ்வாறு கூறினார்.

இஸ்லாத்தின் புனிதத்துக்குக் களங்கம் உண்டுபண்ணுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகைதின் வலியுறுத்தினார்.