மேலும் நான்கு தேர்தல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி

PRU 13தேர்தல் நீதிமன்றம், சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்ட நான்கு தேர்தல் முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது.

அவற்றில்  ஒன்று  செப்பாங் நாடாளுமன்றத் தொகுதிக்காக பிஎன் செய்த முறையீடு.   பாஸ் கோலா சிலாங்கூர்,  சுங்கை புசார் நாடாளுமன்றத் தொகுதி முடிவுகளை  எதிர்த்து மனு செய்திருந்தது. பிகேஆர் சாபாக் பெர்னாம் தொகுதிக்காக மனு செய்திருந்தது.

அம்மனுக்களில் சில சரியான விவரங்களைக் கொண்டிருக்கவில்லை என்று நீதிபதி ஸலேகா யூசுப் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மனுதாரரும் தேர்தல் ஆணையத்துக்கும் தேர்தல் அதிகாரிக்கும் ரிம30,000 செலவுத்தொகை கொடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.