‘நியு வில்லேஜ்’ திரைப்படம் மீது சர்ச்சை தொடரும் வேளையில், பிகேஆர் எம்பி ஒருவர், நியு வில்லேஜ் அல்லது தாண்டா புத்ரா போன்ற வரலாற்றுப் படங்களைத் தடை செய்யக்கூடாது என்கிறார்.
“திரைப்படங்களோ, நூல்களோ கலைப்படைப்புகளைத் தடை செய்வதை எதிர்க்கிறேன். அது பேச்சுரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரானது”, என பாயான் பாரு எம்பி சிம் ட்சே ட்சின் கூறினார்.
மலேசியர்கள், “சுயமாக முடிவுசெய்யும் முதிர்ச்சி பெற்றவர்கள்” அவர்கள் எதைப் பார்க்கலாம், எதைப் பார்க்கக்கூடாது என்பதை அவர்களுக்காக மற்றவர்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை என்றாரவர்.
அந்த வகையில்,அவ்விரண்டு படங்களையுமே சுதந்திர மாதமான ஆகஸ்டில் திரையிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.