முஸ்லிம் மாது ஒருவர் தமது நாய்களுடன் ஹரி ராயாவைக் கொண்டாடுவதைக் காட்டும் காணொளிப் பதிவு ஒன்று கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை தாம் அவமானப்படுத்தியதாக தம்மைக் கண்டிக்கின்றவர்கள் சொல்வதை 38 வயதான மஸ்னா முகமட் யூசோப் என்ற அந்த மாது மறுத்தார். உண்மையில் தம்மை பழிக்கின்றவர்கள் தான் தங்கள் சமயத்தை இழிவுபடுத்துகின்றனர் என நாய்களுக்குப் பயிற்சி அளிப்பவருமான அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“நான் சமயத்தை நேசிக்கிறேன். அவர்கள் முதலில் தங்கள் சமயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட என் வீடியோவுக்குத் தவறான விளக்கம் கொடுக்கக் கூடாது.”
“என்னைப் பொறுத்த வரையில் நாய்களை பராமரிப்பதையோ அவற்றைக் கவனித்துக் கொள்வதையோ என் சமயம் தடை செய்யவில்லை,” என்றார் அவர்.
இதனிடையே அந்த காணொளி குறித்து நடவடிக்கை எடுக்குமாறு எம்சிஎம்சி என்ற மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பெர்னாமா அறிவித்துள்ளது.
கண்ணியத்துக்குரிய சகோதரி மஸ்நா அவர்களே! ஒரு முறை நபிகள் நாயகம் தனது சஹபாட்களுடன் சாலையில் செல்லும்போது, செத்து அழுகிய நிலையில் இருந்த நாயை பார்த்து மூக்கை மூடினார்கள் சஹபாட்கள்! நபிகளோ அந்த நாயை பார்த்து நாயின் பல் வருசை என்ன அழகாக இருக்கிறது என்று சஹபாட்களிடம்(தோழர் ) சொன்னார்! மிருகங்களை பராமரிப்பதும் இறைவன் தொண்டே ! எல்லாம் வல்ல இறைவன் இருக்கிறான்! கூலியும் அவனே தரட்டும் !
ஆஹா என்ன அருமையான கருத்து. தொடரட்டும் உங்களின் கருத்துக்கள். வெள்ளியூர் முருகன் இந்த நாய்களை கவனிக்க வில்லையோ