புதிய தடுப்புச் சட்டத்தை எதிர்க்க பிகேஆர் தயாராகிறது

EOஅவசர காலச் சட்டத்தின் (EO) எந்த புதிய பதிப்பையும் பிகேஆர் கடுமையாக  ஆட்சேபிக்கும். காரணம் கடந்த காலத்தில் அந்தச் சட்டம் அரசியல் எதிர்ப்பை  குலைப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்களை குறைப்பதற்கு அல்ல என்று  அந்தக் கட்சியின் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறினார்.

புதிய தடுப்புச் சட்டம் குற்றச் செயல்களைச் சமாளிக்கும் நோக்கத்துடன்
வரையப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட அவர், அத்தகைய  சட்டம் “அனைத்து மலேசியர்களுடைய சிவில், அரசியல் உரிமைகளுக்கு பெருத்த  அபாயத்தைக் கொண்டு வரும்,” என்றார்.EO1

அந்தப் புதிய சட்டத்தை பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா  தலைமையிலான ஒரு குழு வரைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“மக்களவையில் அந்தச் சட்டம் சமர்பிக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள்  அதனை எதிர்ப்போம். மக்களுடைய அடிப்படை உரிமைகளை நாங்கள் ஒருபோது ம் விட்டுக் கொடுக்க மாட்டோம்,” என சுரேந்திரன் ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.