அகமட் ஸாஹிட் இரட்டைத் தரத்தை பின்பற்றுவதாக டிஏபி குற்றம் சாட்டுகின்றது

dap1டிஏபி சரி செய்து விட்ட தவறுக்காக புதிய தேர்தலை நடத்துமாறு அந்தக் கட்சிக்கு  ஆணையிடப்பட்டுள்ள வேளையில், எளிதாக அழியக் கூடிய மை மீது தேர்தல்  ஆணையம் தவறு செய்துள்ளதற்காக ஏன் புதிய தேர்தல்கள் நடத்தப்படவில்லை  என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் வினவியுள்ளார்.

ஆகவே அந்த விஷயத்தில் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி  ‘இரட்டைத் தரத்தைப்’ பின்பற்றுவதாக லிம் சொன்னார்.

“எளிதாக அழியக் கூடிய மை தொடர்பில் தேர்தல் ஆணையம் எந்தத்
திருத்தத்தையும் செய்யாத போது புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக்  கோராத அகமட் ஸாஹிட் ஹமிடி, டிஏபி கட்சித் தேர்தல்களில் நிகழ்ந்த தவறைச்  சரி செய்து விட்ட வேளையில் அது மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என  விரும்புகிறார்,” என பாகான் எம்பி-யுமான லிம் தெரிவித்தார்.

நடப்பு டிஏபி மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் பட்டியலைச் செல்லாது என  சங்கப்பதிவதிகாரி அலுவலகம் எழுத்துப்பூர்வமாக டிஏபி தலைமைத்துவத்திற்குத்  தெரிவிப்பதற்கு முன்னரே அந்த உத்தரவு பற்றி அகமட் ஸாஹிட் அறிவித்ததை  லிம் சுட்டிக்காட்டினார்.