குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு நடப்பிலுள்ள கிரிமினல் சட்ட முறை போதுமானதாக இல்லை என்றால் அதனைச் செய்வதற்கு ஷாரியா சட்டத்துக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருதின் ஹசான் சொல்கிறார்.
“பெருகி விட்ட குற்றச் செயல்களை சமாளிப்பதற்கு அதிகாரிகளிடம் யோசனைகள் வற்றி விட்டதாகத் தெரிகிறது. நாடும் தேக்கமடைந்துள்ளது. நடப்பு முறை முற்றாக தோல்வி கண்டுள்ளதால் அதற்கு மாற்றாக ஷாரியா சட்டத்தை அமலாக்குவது அவசியம் என நான் ஏற்கனவே சொன்னதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.”
“அதிகரித்துள்ள குற்றச் செயல் விகிதத்தைக் கட்டுப்படுத்தவும் குற்றங்களைச் சமாளிக்கவும் தனக்கு உள்ள ஆற்றலையும் வலிமையையும் நிரூபிப்பதற்கு இஸ்லாத்துக்கு வாய்ப்புக் கொடுங்கள்.”
“இஸ்லாம் எல்லா இனங்களும் குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களும், குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தப்படுவதை இஸ்லாம் நிச்சயம் உறுதி செய்யும். அத்துடன் அல்லாஹ்-வின் கருணையும் ஆசியும் கிடைக்கும்,” என அவர் இன்று ஒர் அறிக்கையில்
தெரிவித்தார்.
சந்தர்பத்தை பயன்படுத்த வேண்டாம் ,கடும் குற்றத்தை தடுக்க தடுப்பு சட்டத்துக்கு இடையுறு செய்யாமல் இருந்தாலே போதும் ,சாரியா சட்டம் இஸ்லாம் அல்லாதவர்களுக்கு பொருந்தாத ஒன்று ,சந்தர்பம் பார்த்து உள்ளே நுழைய வேண்டாம் .
உண்மை இஸ்லாமிய சட்டத்தை மதிப்பு அளிக்கிறோம் ஐயா ! ஆனால் மலேசியா இஸ்லாமியர் சட்டத்தை நம்ப மறுக்கிறது என் மனம் ! பிரேதத்தை தூக்கி செல்வது ,குழந்தைகளை தாயிடம் இருந்து பிரிப்பது ,இதுவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டதா ?
நம் நாட்டில் இருக்கும் குற்றவியல் சட்டம் போதுமானதே. வேலியை காக்க வேண்டியவர்கள் பயிரை மேயாமல் இருந்தால் சட்டம் அதன் வேலையைத் தானாகச் செய்யும். குளறுபடி சட்டத்தில் இல்லை. அதை செயல்படுத்துவோரிடம்தான் உள்ளது. காவல் துறை, நீதித்துறை, வழக்கறிஞர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு இலாக அவரவர் வேலையை ஒழுங்காகச் செய்தால் குற்றச் செயல்கள் தானாக குறைந்து விடும். இதற்குப் போய் அலட்டிக்காத நாசா!
தேனீ அவர்களது கருத்தை நான் வரவேற்கிறேன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை….