குளியலறை உணவருந்தும் இடமாக பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் தகவல் அளித்தவரைத் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்று கூறிய சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமாரை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் சாடினார்.
“அவருக்குக் கிறுக்குத்தான் பிடித்திருக்க வேண்டும். தேச நிந்தனைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு”, என்றவர் மலேசியாகினியிடம் கூறினார்.
“அம்னோ உயர்தலைவர் ஒருவர் இப்படி கருத்துரைத்திருப்பது வருத்தமளிக்கிறது”, என்றாரவர்.
மஇகா வியூகத் தலைவர் சா.வேள்பாரியும், நோ ஒமாரைக் கண்டித்தார்.“யார் மீதாவது குற்றம் சாட்டுவதாக இருந்தால் தலைமையாசிரியர்மீதுதான் குற்றம் சாட்ட வேண்டும்”, என்றாரவர்.
கெராக்கான் இளைஞர் பகுதியும் நோ ஒமாருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒரு தலைவனுக்கு இது அழகு, mic காரன் தலைவனோ அல்லது வாலோ வாயை திறக்க நேரம் எது????????
என்ன நடக்குது? தாய் கட்சி என்று தப்பட்டம் அடிக்கும் ம இ கா தலைவர்கள் கம்முன்னு இருகாங்க, ம சீ ச நமக்காக பேசுது ! உருப்பட்டுடும் !
இவருக்காச்சும் இப்படிக் கேட்கத் தோனுச்சே!
ம.இ.கா. பசங்க சமுதாய தலைவர்களாம். சீன சமூகத் தலைவர்கள் கொடுக்கும் குரல் மாதிரி கூட ம.இ.கா. பசங்க கொடுக்கல!
நம்ப தலைகள்தான் பாப்பு ஆகிடார்களே !
குனிந்து குனித்து நெளிஞ்சு நெளிஞ்சு முத்தம் கொடுக்க தெரியும்
நிமிர்த்து கேக்க தில் இல்லை …!
வேள்பாரி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ,எய்தவன் இருக்க (கல்வி அமைச்சர் முஹைதீன் யாசின்) அம்பை நோகுவதேன்? (பள்ளி தலைமை ஆசிரியர் ).உங்கள் வீரத்தை கல்வி அமைச்சரிடம் காட்ட முடியுமா?
இந்திய சீன மாணவர்களை வருடா வருடம் இந்த இனவாத மலாய்க்கார ஆசிரியர்கள் அத்துமீறி வசைபாடுவதை தட்டிக்கேட்க நாதியில்லை என்று நம்பக்கூடாது . ஒட்டுமொத்தமாக பாதிப்புக்குள்ளான தரப்பினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் …
மானபங்கம் என்று விவாதம் செய்யின் ..தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டால் அரசாங்க தொழில் பாதிப்பு வரும் … பிறகு இந்த மாலைக்கார ஆசிரியர்கள் வாலை ஆட்டமாட்டார்கள் ……. செய்வோம் இப்பொழுதே !
கல்வி அமைச்சு இந்த விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையை தீவிரமாக செய்ததாக தெரியவில்லை ! காரணம் இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும் ! இந்த மாதிரியான நிகழ்வுகள் மலாய்க்கார ஆசிரியர்கள் தான் செய்கின்றனர் …. இவர்களை தண்டித்ததாக அத்தாட்சிகளே இல்லை … தெரிந்தவரை ஓய்வு , பள்ளி மாற்றம் இது தானே … பிறகு எப்படி திருந்துவார்கள் ! ஒழுங்கு சட்டம் …ஊழியர் ஒழுங்கு சட்டம் … இந்த சொல்வசைபாடலை திட்டவட்டமாக குறிப்பிடல் பிறகு என்ன தண்டனை … மற்றும் ஆசிரியர் உறுதி மொழி போன்றன தெள்ளதெளிவாக குறிப்பிடல் அவசியம் …கல்வி அமைச்சர் … துணை கல்விஅமைச்சர் … ம இ கா
பெருமான்கள் இதனை கவனத்தில் கொண்டால் நலம் நமக்கே ! தன்மானம் தர்காக்கப்படும் …. வேதாளம் மீண்டும் மரம் ஏறாது !
சரியான போடு போட்டீர் முருகன் அவர்களே….வேள்பாரி அவர்கள் வீரத்தை கல்வி அமைச்சரிடம் காட்ட வேண்டும். வீண் விலம்பரம் செய்து மக்க்களை ஏமாற்றக்கூடாது