மலேசியாவில் சர்ச்சைக்குரிய வகையில், அரசு அறிமுகப்படுத்தவுள்ள தேசிய கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன என்று பிபிசி தமிழ், செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு நாடு ஒரு மொழி’ எனும் கொள்கையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் சிறுபான்மை மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் சீன மற்றும் தமிழ் தரப்பினர் கூறுகிறார்கள்.
இந்த ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து 2025 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்கான தேசிய கல்விப் பெருந்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் கல்வி நடவடிக்கைகளில் பெரிய மாறுதலை கொண்டுவர அரசு எண்ணியுள்ளது.
மலாய் மொழியில் கல்வி
ஆரம்பப் பள்ளிகளில் மலாய் மொழிக் கல்வி அறிமுகமாகிறது.
இதன் மூலம் நாட்டில் அனைத்து இன மக்களும் ஒரே சூழலில் ஒன்றிணைந்து பழகி தேசிய அளவில் வலுவான இணக்கப்பாடு ஏற்படும் என்று அரசு கூறுகிறது.
அரசின் புதிய கொள்கையின்படி, அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் பாஷா மலேசியா எனப்படும் மலாய் மொழி வழியிலான கல்வி கட்டாயமாக்கப்படுகிறது.
நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகளும், அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் நான்காம் ஆண்டு முதல் சமச்சீரான மலாய் மொழியிலான பாடத்திட்டம் அறிமுகமாகிறது என்று அரசு கூறியுள்ளது.
இனவாத கொள்கை
ஆனால் காலங்காலமாக அனைத்து இன மக்களும் தமது தாய்மொழியில் ஆரம்பக் கல்வியை பயின்று வரும் சூழலில், அரசின் இந்த முன்னெடுப்பு இந்திய தமிழ் மக்கள் மற்றும் சீன மக்களின் பண்பாட்டு கூறுகளையும், மொழியையும் அழித்து அவர்களின் இன அடையாளத்தை இல்லாமல் செய்யும் என்று இதற்கு எதிரானவர்கள் கூறுகிறார்கள்.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையே இந்த புதிய தேசிய கல்விப் பெருந்திட்டம் என்று பிபிசி தமிழோசையிடம் கூறினார், மலேசிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கா.ஆறுமுகம். இவரது கருத்துப்பதிவை செவிமடுக்க இங்கே சொடுக்கவும்.
அரசின் இந்தக் கொள்கைத் திட்ட விளக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட சமர்பிக்கப்படவில்லை என்றும் ஆறுமுகம் கூறுகிறார். கடந்த ஆண்டு இந்தத் திட்டம் குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்ட போதே, தம்மைப் போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களையும், எதிர்ப்பையும் புறந்தள்ளி தமது செயல்பாடுகளை அரசு முன்னெடுத்துள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
தமிழ் வாழ்வு தாழ்வு நம் கையில் .
தமிழன் வாழ தமிழ் வாழ வேண்டும் !
டமிலனா ? தமிழனா ?
தமிப்பள்ளியே தமிழைத் தற்காக்கும் தளம். எங்கே அடித்தால் நம் இனப் பண்பாட்டினையும் மொழியையும் வழுவாய் அடிக்கலாம் என்கின்ற வழியறிந்த விளையாட்டு இது. இப்போதும் விட்டால் எப்போதும் கெட்டோம்
அடுத்தப் பொதுத் தேர்தலின் போது மீண்டும் ஒரு 500 வெள்ளியைத் தந்தால் அடுத்த முறையும் பாரிசான் காரனே தேர்தலில் வெற்றிப் பெறுவான். இன்னும் இதை விட அதிகமாகவே செய்வான் . இதையெல்லாம் புரிந்துகொள நம் மக்களுக்கு கொஞ்சம் தெளிவு வேண்டும். இதெல்லாம் 500 வெள்ளியால் வந்த வினை!
இது இன்று நேற்று வரையபட்டதல்ல. முதல் பிரதமரிலிருந்து தற்போதைய பிரதமர் வரை திட்டமிட்டு வேர் அறுக்கும் சதி நாச திட்டமாகும்.
முஹிடினுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கு, அதான் என்னென்னமோ பேசறாரு!
யுனெஸ்கோ சாசனத்தை மதித்து ஆரம்பப் பள்ளிகளில் தாய்மொழிவழி கல்விக்கு வழிவிடுங்கள்…இடை/உயர் நிலைப்பள்ளிகளிலும் உயர் கல்விக்கூடங்களிலும் நீங்கள் நேர்மையான அந்த இன ஒற்றுமைக்குப் பாடுபடுங்கள்! நீங்கள் எதைத்தான் உறுப்படியாக செய்தீர்கள்…PPSMI அமலாக்கத்திலேயே உங்கள் இலட்சணம் தெரிந்ததே. கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து அத்திட்டத்தை அம்போ ஆக்கிவிட்டீர்கள்…..
நாட்டில் நமது வரலாற்று தொடர்புகளை அடியோடு அழித்து வருவதுப் போல் , தாய் மொழி பாடத் திட்டத்தையும் அழிக்க தொடங்கி விட்டார்கள்?
நம் மொழி அழிக்கப் படுமானால், நம் இனமும் இந்நாட்டில் ஒழித்துக்கட்டப்படும். கடாரம் கண்ட தமிழன் நாம். இதற்கு தீர்வு காண வேண்டும்.
மீண்டும் கூறுகிறேன்.சட்ட வல்லுனர்களே!தமிழினத்தையும்,தமிழ்மொழியையும்,நம் கலை கலாச்சாரத்தையும் இழிவுபடுத்தி அழிக்க நினைப்பவர் மீது நடவடிக்கை எடுங்கள்.இந்நாட்டில் நாம் உரிமையுள்ள பிரஜை என்பதை சட்டப்படி நிரூபியுங்கள்.