லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இஸ்ஸா அன்வாருக்கு எதிராக லெம்பா பந்தாய் அம்னோ செயலாளர் முகமட் சாஸாலி கமிலான் சமர்பித்த தேர்தல் மனுவைக் கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
நுருல் இஸ்ஸாவின் வழக்குரைஞர் எட்மண்ட் போன் எடுத்துரைத்த பெரும்பாலான பூர்வாங்க ஆட்சேபங்களை தேர்தல் நீதிபதி ஸபாரியா முகமட் யூசோப் ஏற்றுக் கொண்டார்.
சாஸாலி செலவுத் தொகையாக 40,000 ரிங்கிட் கொடுக்க வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் கடும் போட்டிக்கு இடையில் நுருல் இஸ்ஸா 31,008 வாக்குகளைப் பெற்று முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ராஜா நொங் சிக் ஜைனல் அபிடினை 1,847 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.