என்ஜிஓ: அபாண்ட குற்றச்சாட்டுக்காக துணைப் பிரதமரை விசாரிக்க வேண்டும்

1 bharathiநாய் பயிற்றுனரின்  காணொளி தொடர்பில்  தப்பான கருத்துத் தெரிவித்துள்ள  துணைப் பிரதமர் முகைதின் யாசினை தேசிய நிந்தனை சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்ஜிஓ-களின் கூட்டணி  ஒன்று கூறியுள்ளது.

அவ்விவகாரம் தொடர்பில் விரைவில் போலீசில் புகார் செய்யப்போவதாக மலேசிய இந்தியர் முன்னேற்றச் சங்க (மிபாஸ்) தலைவர் எஸ்.பாரதிதாசன் கூறினார்.

“முகைதின் அவசரப்பட்டு அக்காணொளி முஸ்லிம்-அல்லாத ஒருவரின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு கூறியது அவரின் தகுதிக்கு உகந்ததல்ல; பொறுப்பற்ற பேச்சும் ஆகும்”.

துணைப் பிரதமர் உண்மை அறிந்து பேசியிருக்க வேண்டும் என்றாரவர்.