துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் அலி ருஸ்தாம் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார்

aliஅண்மைய காலமாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு  எதிர்க்கட்சிகளே பழியை ஏற்க வேண்டும் என முன்னாள் மலாக்கா முதலமைச்சர்  அலி ருஸ்தாம் கூறுகிறார்.

காரணம் அந்த எதிர்க்கட்சிகள் தடுப்புக் காவல் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட  வேண்டும் என வற்புறுத்தியதாகும்.

“அவசர காலச் சட்டமும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமும் ரத்துச் செய்யப்பட்டு  விட்டதால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன,” என அவர்  சொன்னதாக பெரித்தா ஹரியான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

“ஆகவே நடந்ததற்கு எதிர்க்கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும்,” என அம்னோ  உச்ச மன்ற உறுப்பினருமான அலி ருஸ்தாம் தெரிவித்தார்.