நஜிப்: பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ள கவலையைப் போக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

najibமலேசியப் பொருளாதார எதிர்காலம் பற்றி பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம்  தெரிவித்துள்ள கவலைகளைப் போக்குவதற்கு 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்  திட்டத்தில் அரசாங்கம் நடவடிக்கைகளை அறிவிக்கும்.

அவ்வாறு அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேல் விவரங்களைத்
தரவில்லை.

“இப்போதைக்கு நாங்கள் பல்வேறு கொள்கைகளை ஆய்வு செய்து வருகிறோம்.  என்றாலும் நிதி பொருளாதார நிலையை வலுப்படுத்த வேண்டிய தேவை  இருப்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.”

நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளில்  முன்னேற்றம் இல்லாததால் மலேசியாவின் எதிர்கால ஆரூடத்தை  ‘நிலைத்தன்மையிலிருந்து’ ‘எதிர்மறையானதாக’ பிட்ச் நிறுவனம் மாற்றியுள்ளது.

2012ம் ஆண்டு இறுதி வாக்கில் அவசரப் பொறுப்புக்கள் சேர்க்கப்படாமல் குடும்பக் கடன், அரசாங்கக் கடன் அளவுகள் 53.3 விழுக்காடாக இருந்தது குறித்தும் அது அச்சம் தெரிவித்தது.